உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

இலை உறைகளும் வெளித் தண்டுகளும் இந்நோய்க்குத் தப்பமுடியாது. ஒரு செடியில் பற்றும் இவ்வகை நோய். மற்றச் செடிகள் எல்லாவற்றையும் ஒழுங்காகவும் முறையாகவும் தொற்றும். கண்டிப்பு மிகுந்த 'கட்டே' நோயின் கண்பட்டால் போதும்; செடிகள் வளர்ச்சி குன்றிச் சிறுத்து விடும்! — பாவம்!

நாற்றுக்கள் பண்ணைகளில் தவழ்ந்து விளையாடும் பச்சிளங் குழந்தைகளாக வளர்கின்ற பருவத்திலோ, அல்லது, வயலில் நடவு செய்யப்பட்டுப் பிள்ளைக்கனியமுதாக வளர்ச்சியடைகின்ற முதலாவது ஆண்டுக்காலத்திலோ ஏலச்செடிகளை 'கட்டே நோய்' (Katte Disease) பீடித்துப் பாதிக்கும் பட்சத்தில், அவை பலன் எதையும் தரவே தராது! ஒரு சில ஆண்டுகள் வளர்ந்து 'பருவம்' அடைந்து முதிர்ந்த நிலையில் நோய் பற்றினால், குருத்துக்கள் ஒன்றிரண்டு மட்டுமே தோன்றுவதுடன், அவை சிறுமை அடைய நேர்வதால், பெருமை தரக்கூடிய வித்துறைகள் வெகு சொற்பமாகவே தோன்றும். நோயின் விளைவாக, விளைச்சலில் உண்டாகும் நஷ்டம் முதல் ஆண்டில் 10 சதவீதம் முதல் 67 சதவீதம் வரையிலும், இரண்டாம் ஆண்டில் 25 முதல் 90 சதவீதம் வரையிலும், மூன்றாவ்து ஆண்டில் 32 முதல் 97 சதவிகிதம் வரையிலும் கூட வேறுபடுவதும் உண்மை நடப்பு!

ஆகவே, சம்பந்தம் கொண்ட முதல் செடிப்பேன் இனம் காணப்பட்ட மறுவினாடியே, அந்நோய்க்குக் கண்ணுக்குப் புலப்படாமலே இலக்காகிவிடும். செடிகளை அப்புறப்படுத்தி விடவேண்டும். ஏனென்றால், இந்நோய் ஒரு சில நிமிஷங்களுக்குள்ளாகவே ஜெட் விமானமாக விரைந்து பறந்து நிலம் பூராவிலுமே பரவிவிடும்!

இவ்வளவு விஷத்தன்மை படைத்திட்ட செடிப்பேன்களால் பரவும் கட்டே நோய்க்கான அறிகுறிகள் காணப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/54&oldid=505966" இலிருந்து மீள்விக்கப்பட்டது