பக்கம்:ஏலக்காய்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

செடிகளைக் கண்டறிந்து அவற்றின்மீது செறிவு மிக்க 'டிமதொட்ரோகர்' பூச்சி மருந்தை 0.05% அளவில் தண்ணிரில் கலந்து கரைத்துத் தெளிப்பது சிலாக்கியம். மருந்துத் தெளிப்பு முடிந்த மூன்று தினங்கள் கழிந்ததும், நோய்ச் செடிகளை வேரோடு எடுத்து அப்புறப்படுத்தி எரித்து விடுவதும் நல்லது. ஏலச்செடிகளின் மரபு வழிப் பட்ட துணைச் செடிகள் மற்றும் ஆதாரச் செடிகள் தோன்றியிருந்தால் அவற்றையும் நோய் நுண்மங்கள் விட்டு வைப்பது கிடையாது; ஆதலால், அவற்றையும் வயல்களில் விட்டு வைப்பது தப்பு!

'கட்டே' நோயின் வாடையே படாத ஆரோக்கியமான சாகுபடிப் புறங்களில் கண்காணிப்போடு வளர்ந்து முதிர்கின்ற நல்ல ஏலச்செடிகளினின்றும் சேகரம் செய்யப்படும் விதைகள்தாம் ஆரோக்கியமான நடவுச் சாதனமாகப் பயன்படவும், பயன்தரவும் முடியும்!


அழுகல் கோய்

பூஞ்சணநோய்ப் பட்டியலில் இடம்பெறும் அழுகல் நோய் கேரள மண்ணின் மலைப்புறங்களில் கூடுதலாகவே ஆர்ப்பாட்டமும் அட்டூழியமும் செய்யும், 'பிதியம்' நோய் நுண்மங்களின் ரத்தப்பந்தம் கொண்டவை; ஜூலை பிறந்துவிட்டால், இந்நோயும் பிறந்துவிடும். நவம்பர்டிசம்பர் வரை நீடிக்குமாம்! இளம் வித்துறைகள் மீது இந்தோய்க்குக் காதலோ, காமமோ கூடுதல். ஆகவே தான், அவற்றிலே நைவுப்புண்கள் தாஜ்மகால்களாக உருவாகின்றன. தண்ணிரில் ஊறவைத்தது போலத் தோன்றும் இந்த நோய்க் கொப்புளங்கள் பெரிதாகும் பொழுது, மேற்கண்ட வித்துறைகள் பூச்சரக்காம்புகளிலிருந்து உதிர்ந்து விழுந்துவிடும். பூங்கொத்துக்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதிகளைத் தொற்றிப் பரவும் நோய் முடிந்த முடிவில் அச்செடிகளையே அழித்துவிடும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/55&oldid=505964" இலிருந்து மீள்விக்கப்பட்டது