பக்கம்:ஏலக்காய்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

ஆனாலும் இந்த ஏலக்காய்ச் செடி இன்னொரு வழியிலும் விந்தைமிகு செடியாகவே இயற்கையின் விதிவசத்தால் அமைந்துவிட்டது! அதாவது, ஏலக்காய்ப் பூக்களில் இயல்பிலேயே சுயமகரந்தச் சேர்க்கை ஏற்படுவதற்கான பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. ஆதலால், அது கலப்பு மகரந்தச் சேர்க்கைச் சார்புடைய செடியாகவும் விளங்கவேண்டியதாயிற்று.

ஏலக்காய்ப் பூக்களில் மகரந்தச் சேர்க்கையை உண்டு பண்ணும் தேனிக்கள் ஏலக்காயின் ஆப்த நண்பர்களாகவே செயலாற்றும். இதன் விளைவாக, ஏலச்செடிகளில் கூடுதல் அளவில் காய்கள் தோன்றவும், விளைச்சல் பெருகவும் ஏதுவாகிறது.

ஆகவே, ஒவ்வொரு ஏலச் சாகுபடிப் பகுதியிலும் குறைந்தது நான்கு தேன்கூடுகளையாவது அமைத்துச் சரி வரப் பராமரித்தால், ஏலக்காய் மகசூல் தனிப்பட்ட முறையில் உயர்வடையவும் கூடும்.

சாகுபடித் தோட்டங்களை அச்சுறுத்தும் விஷப் பூச்சிகள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுத்துக் கட்டுப்படுத்தப் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் போது, தேனிக்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏல விவசாயிகள் செயற்படவேண்டும். அப்போது தான் பிள்ளையார் பிடித்தால், அது பிள்ளையாராகவே அமைய முடியும்!

ஆகவே :

ஏலத் தோட்டப் பண்ணைகளில் தேனீக்களின் நடமாட்டம் மிகுந்திருக்கும் காலை நேரங்களை அந்தத் தேனிக்கான மகரந்தச் சேர்க்கை அலுவல் நேரமாக ஒதுக்கிவிட்டு, தேனிக்கள் தென்படாத மாலை வேளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/58&oldid=505968" இலிருந்து மீள்விக்கப்பட்டது