பக்கம்:ஏலக்காய்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

சாரத்தில் முக்கியமானதொரு பங்கைப் பெறத் தொடங்கிய ஏலக்காய், அரபு மக்களின் அன்றாட உணவுகளிலும் பழக்கவழக்கங்களிலும் இன்றியமையாப் பொருளாக ஆகி, அவர்களது சமுதாய அந்தஸ்தை நிர்ணயிக்கும் ஓர் உயிர்ப் பொருளாகவும் உயர்ந்துவிட்டது! ஆகவே, நறுமணப் பொருட்களின், குறிப்பாக, ஏலக்காயின் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுடன் முதன்முதலில் தொடர்பு கொண்ட பெருமையும் அரேபியர்களுக்கே கிடைத்தது. பின்னர், எகிப்தியர்கள் பின் தொடர்ந்தனர். அப்பால், எகிப்தின் மீது படையெடுத்து வென்றது ரோம். பின்பு, ரோம் நாட்டினர் ஏலக்காய் மற்றும் வாசனைத் திரவியங்களை வாணிபம் செய்திட இந்தியாவோடு தொடர்பு கொள்ளலாயினர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/60&oldid=505970" இருந்து மீள்விக்கப்பட்டது