பக்கம்:ஏலக்காய்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

ஏலக்காயின் அளவு 1435 மெட்ரிக் டன்னாகவும், ஏற்றுமதி மூலம் நாட்டுக்குக் கிட்டிய அந்நியச் செலாவணி வருமானம் ரூ 8.37 கோடியாகவும் மட்டிலுமே அமைந்திருந்தது.

ஆனால், 1978-79.ல் உற்பத்தி கூடியதுபோலவே, ஏற்றுமதியும் கூடி, ஏலக்காய் ஏற்றுமதிகள் 2876 மெட்ரிக் டன்னை எட்டிப்பிடிக்க, ஏற்றுமதி வருவாய் ரூ 58.40 கோடியாகவும் உயர்ந்து உச்சமடைந்தது.

ஒரு விஷயம்: 1983-84-ல் ஏல விளைச்சல் குறையவே -1600 மெ.டன்னாகக் குறையவே - ஏற்றுமதி அளவும் 258 மெட்ரிக் டன் என்னும் வருந்தத்தக்க நிலையை அடைய வேண்டியதாயிற்று! இது தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பட நேர்ந்த சோதிப்புத்தான்!.

ஆனாலும் —

இந்த 1985-ம் ஆண்டில் ஏலக்காய் உற்பத்தி பழைய படியும் மறுமலர்ச்சி அடைந்து, ஏற்றுமதிகள் உயர்ந்து, நாட்டின் அந்நியச் செலாவணி ஆதாயங்கள்கூடி, நல்ல பலன்கள் ஏலச் சாகுபடியில் கைகூடுமென்றும் எதிர் பார்க்கப்படுகிறது!


சிறிய ரக ஏலக்காய்!

நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னர், தென் இந்திய மண்ணிலேதான் ஏலச்செடி முதன்முதலில் விளைந்தது. ஏலக்காய்க்கு எலெட்டேரியா என்பதுதான் பிறப்புவழிப் பெயர். ஏலக்காய் விதைகள் என்னும் பொருள்படும் 'ஏலத்தாரி' என்கிற சொல்லினின்றும் உருவானது. ஏலக்காய்க்கான அசல் பதம் 'அமோமம்' என்ற லத்தின் வார்த்தையினின்றும் பிறந்தது என்பதே சரியான வாதமாகவும் கருதப்படும். இஞ்சி மற்றும் மஞ்சள் தாவர இனத்தைக் சார்ந்தது. ஏலக்காய் என்பதும் கவனிக்கத் தக்கதே ஆகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/64&oldid=505974" இருந்து மீள்விக்கப்பட்டது