பக்கம்:ஏலக்காய்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

ஏலக்காய் உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் கூடுதலான, அளவில் வெளிநாடுகளிலேதான் உபயோகம் ஆகிறது. 60 உலக நாடுகளில் ஏலக்காய் மணக்கும். மத்தியக் கிழக்கு நாடுகள்தாம் ஏலக்காயைப் பயன்படுத்திப் பயன் அடைவதில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளன. சோவியத் ருஷ்யா, ஜப்பான், மேற்கு ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து முதலான நாடுகளில் ஏலக்காய் வகைகளும் குறிப்பாக, ஆலப்புழை உயர் பச்சை ரக ஏலக்காயும், ஏலக்காய் எண்ணெயும் பெரு மளவில் உபயோகமாகின்றன.


ஏலக்காய்ப் பயன்கள்

இந்திய நாட்டினைப் பொறுத்தமட்டிலே, ஏலக்காய், உணவுத் தயாரிப்பில் மட்டுமல்லாமல், மருந்து தயாரிப்பிலும் தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அஜீர்ணம் தலைவலியைப் போக்கவும் ரத்தச் சுத்திகரிப்புப் பணியை மேற்கொள்ளவும் உதவும். பிரசவக் காலத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சக்தியை நல்குவதிலும் ஏலக்காய் முன்னணியில் நிற்கிறது. உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். அது மாதிரியே, ஏலக்காய் மணக்காத உணவுப்பொருள் சுவைப்பது கிடையாது! - தாம்பூலத்திற்கு நறுமண இன்சுவை அருளும் பெருமைக்குரியதும் இந்திய ஏலக்காய்தான்!

இந்திய நாட்டில் ஹார்லிக்ஸ், காம்ப்ளான் போன்ற உணவுப் பொருட்களிலும் ரொட்டி, மிட்டாய்த் தின் பண்டங்களிலும், 'டைஜீன்' போன்ற ஜீரண சக்திமிக்க ஆங்கில மருந்துகளிலும் ஏலம் மணம் பரப்பும்!


சவூதி அரேபியாவில் ஏலக்காய்!

மத்தியக் கிழக்கு நாடுகளிலே, சவூதி அரேபியாவில் தான் இந்திய ஏலக்காய் பெரும் அளவில் செலவு ஆகிறது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/66&oldid=505976" இருந்து மீள்விக்கப்பட்டது