பக்கம்:ஏலக்காய்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ஏற்றுமதி விவரம் எல்லாம் இந்நூலில் பகுத்தும் தொகுத்தும் கூறப்பெற்றுள்ளன. ஒரு பொருளைப் பற்றிய எல்லா அம்சங்களும் வண்ணம், வடிவம், பொருள், இயக்கம், பயன், அமைப்பு பலவற்றையும் எவ்வெவ்வகையில் விளக்க இயலுமோ அவ்வவ்வகையில் விளக்கியுள்ளார்.

ஆசிரியர் பூவை. ஆறுமுகம் சிறுகதை, நாவல் முதலிய படைப்பிலக்கியங்களில் அரசின் பரிசையும் பலரின் பாராட்டையும் பெற்றவர். சிறந்த பத்திரிகையாசிரியர். எதனையும் எளிமையாகக் கூறும் திறத்தினர். நீண்ட காலமக எழுதிவரும் எழுத்தாளர். தம்முடைய எழுத்துலக அனுபவங்களையெல்லாம் அழகு ஓவியமாக ஆக்கி வருபவர். புகழ் பெற்ற ஆசிரியர் பூவை. ஆறுமுகம் புதுவகை நூல்களைப் படைப்பதிலும் சிறந்தவர் என்பதற்கு இந்நூல் ஒர் எடுத்துக்காட்டு. ஏலக்காயின் எல்லா வகைப் பயன்களையும் ஆசிரியர் மணக்க மணக்க எழுதியுள்ளார்.

புகழ் மணம் பரப்பி வரும் மணிவாசகர் பதிப்பகம் வெள்ளிவிழா ஆண்டில் ஏலக்காயின் மணம் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரப்ப முன்வந்துள்ளது. துறைதோறும் தமிழுக்கு வளம் சேர்க்கும் பதிப்பகத்திற்கு மேலும் புகழ் மணம் கூட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/7&oldid=505890" இருந்து மீள்விக்கப்பட்டது