பக்கம்:ஏலக்காய்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஏலக்காய் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த புள்ளிக் கணக்குகளைச் சேகரம் செய்து அவ்வப்போது வெளியிடுவது;

ஏலப் பயிர்த் தொழில் நடத்தப்படும் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலையை உயர்த்தவும், அவர்கட்கான வசதிகள், ஆர்வத்துரண்டுதல்கள் மற்றும் பண உதவி வாய்ப்புக்களை அளிப்பது;

ஏல விவசாயம் பற்றிய தொழில் நுட்ப யோசனைகளையும் விரிவாக்கப் பணிகளையும் வழங்குவது;

ஏலத் தோட்ட விவசாயப் பண்ணைகளில் மறுநடவுக்கடன் உதவிகள் புரிவது;

தவணைமுறைக் கடன் வாயிலாக நீர்ப்பாசனத் தெளிப்பான் முதலான விவசாய உபகரணங்களை விநியோகம் செய்வது;

நோய்க்கு இலக்காகாததும் உயர் விளைச்சல் தரக்கூடியதுமான ஆரோக்கியமான ஏல நாற்று ரகங்களை விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் சகாயமான விலைகளில் விநியோகம் செய்வது;

மண் பரிசோதனை மற்றும் உரம் இடுதல் சம்பந்தப்பட்ட இலவசமான ஆலோசனைகளை வழங்குவது;

ஏலக்காய்த் தோட்டச் சாகுபடியின் ஆக்கத்துக்கும் ஏலக்காய் விற்பனையின் ஊக்கத்துக்கும் உதவக்கூடிய தீவிரப் பிரசார இயக்கங்களை நடத்துவது;

ஏலக்காய்ச் சமுதாயம் உள்நாட்டிலும் அயல்நாடுகளில் சர்வதேச அளவிலும் வளர்ந்தோங்க நடவடிக்கை எடுப்பது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/71&oldid=505981" இருந்து மீள்விக்கப்பட்டது