உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

வாரியத்தின் முந்தையத் தலைவராகத் தமிழ்ப் பெருங்கவிஞர் திரு. டி. வி. சுவாமிநாதன், ஐ. ஏ. எஸ். பேரோடும் புகழோடும் விளங்கினார். இப்போது அவர் கேரள அரசின் பொறுப்பு மிக்க செயலாளர்!

தற்சமயம் மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராகப் பதவி வகிக்கும் பேராசிரியர் கே. எம். சாண்டி, பின்னர் வாரியத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அப்பால், திரு. எஸ். ஜி. சுந்தரம் ஐ. ஏ. எஸ். வாரியத்தின் தலைவர் ஆனார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் பஞ்சாப் மாநிலத்தில் 16 ஆண்டுகள் அரசுப் பணி புரிந்தபின் கேரளம் நாடி வந்தார்.

ஏலக்காய்ச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு ஏலக்காய் வாரியத்தின் தலைமைச் செயலகம் கேரளம் ஏர்ணாகுளத்தில் அதன் தலைவரின் தலைமைப் பொறுப்பின் கீழ், ஏலக்காய் வளர்ச்சி மற்றும் மேன்மைக்கான பணிமுறைகளில் இயங்கிவருகிறது.

வாரியத்தின் ஏலக்காய் வளர்ச்சித் துறையின் சார்பில், ஒரு பிராந்திய அலுவலகமும், ஐந்து வட்டார அலுவலகங்களும் இருபத்தெட்டு செயற்களப் பிரிவுகளும் அதிகார பூர்வமான நாற்றுப் பண்ணைகள் இருபத்தொன்றும் ஏலம் பயிர் செய்யப்படும் கேரளம், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் செயலாற்றி வருகின்றன.

இவை தவிர, இணைப்புத்துறை அலுவலகங்கள் வேறு புதுடில்லி, சென்னை, பெங்களுர் மற்றும் கொச்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாரியத்தின் பெருமிதத்தைப் பெருமைப்படுத்திடும் அளவிலே, 'இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி நிலையம்' ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/74&oldid=505984" இலிருந்து மீள்விக்கப்பட்டது