உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

Prices) என்னும் ஆங்கில வார ஏடு ஒன்றும் வெளியிடப் படுகிறது.

மேலும், 'ஏலக்காய்த் தோழன்' என்ற கவர்ச்சிமிகு பெயரோடு ஏலக்காய் மீதான தகவல்கள் அடங்கிய விலை மதிப்பு மிக்க நாட்குறிப்பையும் வாரியம் ஆண்டுதோறும் பிரசுரம் செய்து வருகிறது. பல வண்ணங்களில் ஏலக்காய்ச் சாகுபடி முறைகள், தழை உரம் இடுதல், நோய்த் தடுப்பு, ஏலக்காப்ப் பயன் முறைகள், உணவுத் தயாரிப்பில் ஏலம், ஏலக்காய்ப் புள்ளி விவரங்கள் போன்ற சிறுசிறு நூல்களும் துண்டுப் பிரசுரங்களும் பல மொழிகளிலே வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஏலக்காய் பற்றிய செய்திப் படம் ஒன்றும் வண்ணக் கோலத்தோடு ஏலச் சாகுபடி மாநிலங்களிலெல்லாம் திரையிடப்படுகிறது.

இது தவிர, பெரிய ஏலக்காய் குறித்த உள்நாட்டு விற்பனை மதிப்பாய்வின் அறிக்கை ஒன்றையும் இப்போது புதிதாகவே வெளியிட்டுள்ளது வாரியம்.

ஏலக்காயை விவசாயம் செய்பவர்களில் பெரும் பான்மையினர் சின்னஞ் சிறிய விவசாயிகள்தானே? ஆகவே, அவர்கள் கூட்டுறவு முறையில் வளம் பெற, கூட்டுறவுச் சங்கங்கள் செயற்படவும் வாரியம் உதவுகிறது. இத்துறையில் ஏலக்காய்க் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஏலக்கேந்திரங்களில் சிறு சாகுபடியாளர்கள் மூலம் ஏலக்காய் கொள்முதல் செய்யப் படவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

வாரியத்தின் வாயிலாகக் கல்வி நிறுவனங்களுக்கும் மருத்துவ அமைப்புக்களுக்கும் மூலதன மான்யங்களும் வழங்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/76&oldid=505987" இலிருந்து மீள்விக்கப்பட்டது