பக்கம்:ஏலக்காய்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கேரளக்காரர் திரு. மோகனசந்திரன் ஆகியோரும் வாரியத்தின் தலைவர்களாகப் பொறுப்பேற்று, ஏலக்காய் வளர்ச்சியின் கீழ் ஏலச்சாகுபடி, ஏலச்சாகுபடியாளர்கள் மற்றும் ஏலத் தோட்டப் பணியாளர்களின் மேம்பாட்டுக் கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தினார்கள்.

தொட்ட இடம் பூ மணக்கும் என்று பாடினார் கவியரசு.

இந்த உண்மை ஏலக்காய்க்குச் சாலவும் பொருந்தும்.

வாரியத்தின் கிளை அலுவலகம் ஒன்றைத் தமிழ் நாட்டிலும் திறக்க வேண்டுமென்று விரும்பியது வாரியம்! நான் இணைப்புத்துறை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றேன். தமிழ் மண்ணை மிதித்தேன்; வாசமிகு ஏலக்காய் மணத்தில் தேமதுரத் தமிழ் மணமும் கலந்தது. சென்னையில் நடைபெற்ற கண்காட்சிகளிலும் சரி, வர்த்தகப் பொருட்காட்சியிலும் சரி பொதுமக்கள் விலை மதிப்பு மிகுந்த ஏலக்காயை விலைச் சலுகையோடு பெறவும் வழி செய்தேன். வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் ஏலமணம் பரப்பியதும் உண்டு; தமிழ் ஏடுகளில் பெரும்பாலானவை ஏலச்செய்தி விரும்பி வெளியிட்டன. செய்தித் திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன: உண்மை தான்!—இந்திய ஏலக்காயின் செல்வாக்கும் புகழும் உலக அரங்கிலே கொடிகட்டிப் பறந்தன; பறக்கின்றன.

பண்டைத்தமிழ் இலக்கியங்களான குறுந்தொகை, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்றவற்றில் ஏலக்காய் மணக்கும். தவிர, ஏலக்காய்க்குப் பக்தி மணமும் உண்டு. திருவாசகத்திலே, 'ஏலவார்குழலிமார்' என்பதாக ஏலக்காய் மூலம் பெண்டிர் சிறப்பிக்கப்படுவதையும் காண்கிறோம்.

என்னுடைய பதவிக் காலத்தின் கடைசி நாட்கள் உணர்ச்சி பூர்வமானவையாகவே அமைத்தன! தொலைக் காட்சியில் ஏலக்காய் பற்றிய என்னுடைய பேட்டி ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, தொலைக்காட்சிக்காக நான் எழுதிய பாடலையும் இப்போது நான் எண்ணிப் பார்க்கிறேன்.

"எங்கள் ராணி, ஏலக்காய் ராணி!
எங்கெங்கும் வாழ்கின்ற இனிய ராணி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/9&oldid=506239" இருந்து மீள்விக்கப்பட்டது