பக்கம்:ஏழாவது வாசல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16ஏழாவது வாசல்

உயிருடன் பிறந்த புலிக்குட்டி ஆடுகளோடு சேர்ந்து வாழலாயிற்று. பிறந்ததிலிருந்தே ஆடுகளோடு சேர்ந்து அது வளர்ந்து வந்ததால் அதற்கு ஆடுகளின் பழக்க வழக்கமே உண்டாயிற்று. ஆடுகள் மேயும் புல், பூண்டு, இலை, தழைகளையே அதுவும் மேய்ந்து வந்தது. ஆடுகள் கத்துவதுபோலவே “அம்மம்மே மெம்மம்மே” என்று அதுவும், கத்திப் பழகியது. உருவம்தான் புலியாக இருந்ததே ஒழிய அதன் செயல்கள், ஆட்டுப் போக்காகவே இருந்தன. இப்படியே வளர்ந்து அது ஒரு பெரிய புலியாகி விட்டது.

ஒரு நாள் வேறொரு புலி இந்த ஆட்டு மந்தையுள் புகுந்து வேட்டையாடியது. அந்தப் புலியைக் கண்டு ஆடுகள் பயந்து ஓடின. ஆட்டுக் கூட்டத்துப் புலியும் பயந்து அலறிக் கொண்டு ஓடியது. புதுப் புலிக்கு இந்த ஆட்டுப் புலியின் செயல் வினோதமாகப் பட்டது. அது ஆடுகளின் மீது பாய்வதை நிறுத்திவிட்டு ஆட்டுப் புலியைத் துரத்திச் சென்று கழுத்தைப் பற்றிப் பிடித்தது. பிடிபட்ட புலி, ‘அம்மம்மே’ என்று கத்தியதும் புதுப் புலிக்கு மிக அருவருப்பாயிருந்தது. அது ஆட்டுப் புலியைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/18&oldid=989004" இலிருந்து மீள்விக்கப்பட்டது