பக்கம்:ஏழாவது வாசல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18ஏழாவது வாசல்

ஓர் ஆசை தோன்றியது. புதுப்புலி வைத்திருந்த இறைச்சித் துண்டுகளை யெல்லாம் கடித்துக் கடித்துத் தின்னத் தொடங்கியது. இத்தனை நாளும் தான் அடையாத ஓர் இன்பத்தை அடைந்தது போல அதற்குத் தோன்றியது. பழக்க வழக்கத்தால் மறைந்திருந்த அதன் புலிக்குணம் அதனிடம் திரும்பிவிட்டது. தானும் ஒரு புலி என்ற உணர்வு அதற்கு வந்து விட்டது.

“இப்பொழுது தெரிகிறதா, நீயும் என்னைப் போல் ஒரு புலிதான். இந்த ஆடுகள் நாம் அடித்துத் திண்பதற்காகவே இருக்கின்றன; சேர்ந்து வாழ்வதற்காக அல்ல. வா, வா குகைக்குப் போகலாம்” என்று புதுப்புலி அழைத்தது. பழைய புலி உறுமிக் கொண்டு அதைப் பின் தொடர்ந்தது.

தான் யாரென்று அறியாத வரையில் மனிதன் தன் குணத்துக்கு மாறான மூடச்செயல்களைச் செய்கிறான். அவன் தன்னையறிந்த பிறகுதான், இறைவனுக்குகந்த இனிய செயல்களைச் செய்யத் தொடங்குகின்றான். தான் யார் என்பதை மனிதன் அறியும் போது தன்னுள் இருக்கும் கடவுள் உணர்வைப் பெறுகின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/20&oldid=989006" இலிருந்து மீள்விக்கப்பட்டது