பக்கம்:ஏழாவது வாசல்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26ஏழாவது வாசல்
 

சிந்தனை செய்தான். இப்படியாக அவன் சிந்தனையும் கணக்கும் நீண்டு கொண்டே போயிற்று.

மற்றொரு மனிதன், நேரே தோட்டக்காரனிடம் சென்றான். மாம்பழங்களின் அருமையைப் புகழ்ந்து சொன்னான். அதுபோன்ற நல்ல ஜாதி மாம்பழங்கள் நாட்டில் கிடைப்பது அரிது என்றுசொன்னான். தோட்டக்காரனுக்கு மனம் குளிர்ந்து போய் விட்டது. இருவரும் நண்பர்களாகி விட்டார்கள். தோட்டக்காரன் அவனுக்குச் சிலபழங்களைப் பறித்துக்கொடுத்தான். உண்மையிலேயே அவை சுவையான மாம்பழங்கள். அவற்றை வாங்கித்தின்றுவிட்டு. மகிழ்ச்சியாக அந்த மனிதன் திரும்பினான்.

இந்த இரண்டு மனிதர்களில் யார் அறிவாளி? தோட்டக் காரனுடன் நட்புக் கொண்டு மாம்பழம் தின்றவனா? தோப்புக்கு விலை மதிப்புப் போட்டவனா?

வீண் சிந்தனைகள் இன்பம் விளைப்பதில்லை.