பக்கம்:ஏழாவது வாசல்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28ஏழாவது வாசல்
 

கள் என்று ஊர் மக்கள் நினைத்துக் கொண்டார்கள், எனவே கோயிலை நோக்கிக் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தார்கள்.

வந்தவர்களில் ஒருவன் விடுவிடுவென்று கோயிலுக்குள் நுழைந்தான். கோயில் பழைய நிலையிலேயே இருந்தது. எங்கும் அசுத்தமாகவே கிடந்தது. தெய்வமும் கொண்டுவந்து வைக்கப்படவில்லை. இந்த நிலையில் மணியடிப்பவர் யார்? என்று அந்த மனிதன் கவனித்தான். அது ‘பொடோ’ தான்.

“அடே, பொடோ உள்ளே தெய்வம் இல்லை. நீ கோயிலைக் கூட்டிப் பெருக்கிக் கழுவிச் சுத்தப்படுத்தவும் இல்லை. வெளவால்களும் பறவைகளும் இன்னும் அகன்று போகவும் இல்லை. சிறிது கூடச் செம்மைப் படுத்தாமல், நீ இப்படி மணியடித்து ஊரைக் கூட்டியது வீணாய்ப் போயிற்றே என்று பலவாறு கூறித் துயருற்றான்.

சுத்தப்படுத்தாமலும், தெய்வம் இல்லாமலும் மணியடித்து ஆரவாரப் படுத்துகின்ற பொடோவைப் போன்ற மனிதர்கள் பலர் இருக்கிறார்கள்.