பக்கம்:ஏழாவது வாசல்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36ஏழாவது வாசல்
 

மூன்றாவதாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். மிகவும் பாடுபட்டு அந்த இடத்தில் ஐம்பது முழம் வரை வெட்டினான். அப்படியும் தண்ணிர் வரவில்லை. அவனுக்கு அலுத்துப் போய்விட்டது. கிணறு தோண்டும் எண்ணத்தையே விட்டுவிட்டான்.

ஒருநாள், அனுபவசாலியான ஒரு பெரியவரிடம் தன் முயற்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். மூன்று முறை கிணறு வெட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லையென்றும், பூமியில் தண்ணீரே அற்றுப் போய் விட்டதென்றும் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

பெரியவர் அவனை நோக்கினார். “தம்பீ, மூன்று இடத்திலும் நீ வெட்டிய மொத்த ஆழம் எவ்வளவு இருக்கும்?” என்று கேட்டார்.

"மொத்தம் நூறு முழம் இருக்கும்” என்று பதில் சொன்னான் அந்த மனிதன்.

“இந்த நூறு முழத்தையும் ஒரே இடத்தில் தோண்டியிருந்தால், எப்படியும் தண்ணீர் தோன்றியிருக்குமே!” என்றார் அந்தப் பெரிய மனிதர்.