பக்கம்:ஏழாவது வாசல்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் பெயர் உயர்வு தரும்  41
 

மொண்டு கொண்டு இருந்தான். பெரியார் கிருஷ்ண கிசோர் அந்த மனிதனை அணுகி, "ஐயா, கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்டார்,

அந்த மனிதன் அவரை நிமிர்ந்து பார்த்தான். “சுவாமி, தாங்கள் பிராமணர், நான் தாழ்ந்த சாதிக்காரன். நான் எப்படித் தங்களுக்குத் தண்ணீர் கொடுக்க முடியும்?” என்று கேட்டான்.

"மகனே கடவுள் பெயரைச் சொல். நீ உயர்ந்தவனாகி விடுவாய். அதன் பிறகு எனக்குத் தண்ணீர் கொடு” என்று சொன்னார்.

அந்த மனிதன் அவ்வாறே செய்தான். கோவிந்தா! கோவிந்தா! என்று கூறிக் கொண்டே அவன் தண்ணீர் மொண்டு கொடுத்தான். உண்மையான வைதிகப் பிராமணரான கிருஷ்ண கிசோர், உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியோடு நீர் அருந்தினார்.

இறைவன் முன்னால் எல்லா மனிதரும் சமமே.

மக்களில் உயர்வு தாழ்வு கற்பிப்பது மடமை!