பக்கம்:ஏழாவது வாசல்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48ஏழாவது வாசல்
 

அப்போது அவர்கள் துரோணாசாரியார் என்பவரிடம் கல்வி கற்று வந்தார்கள்.

அந்தக் காலத்திலே ஒரு நாள் மாலை நேரம். அர்ச்சுனனும் கர்ணனும் ஆற்றங்கரையோரத்தில் காற்று வாங்கிக் கொண்டு வந்தார்கள். அப்போது அர்ச்சுனன் கர்ணனைப் பார்த்து, “கர்ணா? சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?” என்று ஒரு கேள்வி கேட்டான்.

'அதற்கு, சமாதானம்தான் நல்லது’ என்று கர்ணன் சொன்னான்.

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று அர்ச்சுனன் கேட்டான்.

'அர்ச்சுனா, சண்டை வந்தால் நான் உன்னை அடித்து விடுவேன். அதை உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அழுது விடுவாய்! நீ அழுவதைப் பார்த்தால் எனக்கு மனம் பொறுக்காது. நானும் அழுதுவிடுவேன். இரண்டு பேரும் அழுவது நல்லதா? நீயே சொல்” என்றான் கர்ணன்,