பக்கம்:ஏழாவது வாசல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?  49

“கர்ணா, நம்முடைய சண்டையைப் பற்றி நான் கேட்கவில்லை. பொதுவாக உலகத்துக்குச் சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?” என்று கேட்டான் அர்ச்சுனன்.

"இந்தப் பொதுப் பேச்சிலெல்லாம் எனக்கு ஈடுபாடு கிடையாது” என்று உதறி விட்டான் கர்ணன்.

“ஒன்றுக்கும் உதவாத பயல்! இவனைக் கொன்று போட்டால் தான் நல்லது” என்று தன் மனத்துக்குள் சொல்லிக் கொண்டான் அர்ச்சுனன்.

பிறகு அர்ச்சுனன் தங்கள் ஆசிரியரான துரோணாச்சாரியாரிடம் சென்றான்.

"குருதேவரே, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?” என்று கேட்டான் அர்ச்சுனன்.

“சண்டைதான் நல்லது!” என்றார் துரோணாச்சாரியார்.

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் அர்ச்சுனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/51&oldid=993901" இலிருந்து மீள்விக்கப்பட்டது