பக்கம்:ஏழாவது வாசல்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52 ஏழாவது வாசல்
 

துரியோதனனுக்குத் தூது விடுத்தார்கள். அவர்களுடைய தூதுவராகக் கண்ணன் புறப்படவிருந்தார்.

அப்போது அர்ச்சுனன் கண்ணனிடம் சென்றான்.

“கண்ணா, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?” என்று கேட்டான்.

“இப்போதைக்கு சமாதானம்தான் நல்லது. அதனால்தான் சமாதானம் பேசத் தூது போகப் போகிறேன்” என்று கூறிவிட்டுக் கண்ணன் புறப்பட்டார். அதன் பிறகு அர்ச்சுனன் யாரையும் கேள்வி கேட்கவில்லை. கடைசியில் அவனே கெளரவர்களை எதிர்த்துச் சண்டைக்குப் புறப்பட்டு விட்டான்.