பக்கம்:ஏழாவது வாசல்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாந்திபேதிப் பிசாசின் கதை  55
 

வேண்டியது என் கடமை. உலகத்தில் நடக்கும் எல்லாச் செயல்களும் அல்லாவின் திருவருளால் நடப்பனவேயன்றி வேறல்ல. அவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை. ஆகவே என் கடமையைச் செய்வதை நீர் தடுக்க முடியாது. முடிந்தாலும் நீர் அதனைத் தடுக்க முயலுதல் சரியான செயலுமாகாது.

மக்கத்திற்கு வந்தவர்கள் எல்லோருமே நல்லவர்கள் என்றும், உண்மையான பக்தர்களென்றும், நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் எண்ணிவிட முடியாது. எத்தனையோ பாவிகளும், தீயவர்களும் வேத விதிகளை மீறி நடப்போரும் அங்கு வந்திருப்பார்கள். மேலும் நல்லவர்கள் எல்லோருமே சாகாமல் இருக்க வேண்டுமென்பது அல்லாவின் விதியல்ல. பாவிகள் மாத்திரமல்லாமல் அப்பாவிகளும் சாகத்தான் செய்கிறார்கள்.

வேறு வேறு நோய்களுக்கு ஆட்பட்டு வருந்தி வருந்தித் துடிதுடித்துச் சாவதைக் காட்டிலும் வாந்தி பேதியால் உடனடியாகச் சாவது மனிதர்களுக்கு வேதனை குறைந்த சாவாக இருக்குமேயன்றி தீங்காக மாட்டாது.