பக்கம்:ஏழாவது வாசல்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 காக்கும் தெய்வமே கொன்றால்  61
 

தாம் தரையில் ஊன்றிய வில்லையும் அம்பையும் எடுத்தார். அம்பின்நுனியில் பச்சை இரத்தம் செந்நிறமாகப் படிந்திருந்தது. இராமர் அன்று வேட்டையே ஆடவில்லை. அப்படியிருக்க அம்பில் எப்படி இரத்தம் வந்தது. அவருக்கு வியப்பாய் இருந்தது.

குனிந்து பார்த்தார். காரணம் தெரிந்தது. வேகமாகக் குளத்தில் இறங்க விரும்பிய இராமர் தரையைப் பார்க்காமலே தம் அம்பை ஊன்றியிருக்கிறார். ஊன்றிய இடத்தில் ஒரு தவளை உட்கார்ந்திருந்தது. அதன் முதுகில் பாய்ந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு தரையில் சொருகியிருக்கிறது அம்பு, இரத்த வெள்ளத்தில் மிதந்த தவளைக் கண்டபோது இராமருக்கு இதயம் துடித்தது. தான் அறியாமல் செய்த பிழைக்குப் பதைத்து வருந்திய இராமர் அந்தத் தவளையை நோக்கினார்.

“ஏ தவளையே, நான்தான் பார்க்காமல் அம்பை ஊன்றி விட்டேன். நீயாவது கத்தியிருக்கக் கூடாதா? நீ கத்தியிருந்தால் நான் கவனித்திருப்பேனே!” என்று கேட்டார்.

“இராமா, எனக்கு ஏதாவது துன்பம் ஏற்படும் காலத்தில், “இராமா என்னைக்