பக்கம்:ஏழாவது வாசல்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6 ஏழாவது வாசல்
 


“சிவப்புக்கும் நீலத்துக்கும் வேற்றுமை தெரியாமல் உளறுகிறானே இவன்” என்று நினைத்துக் கொண்டான் முதல் மனிதன்.

“அடே அது சிவப்பு நிறமடா, சிவப்பு நிறம்!” என்றான்.

“இல்லை யில்லை அது நீலநிறம்தான்” என்றான் இரண்டாவது ஆள்,

“சிவப்பு சிவப்புத் தான்” என்று கத்தினான் முதல் மனிதன்.

“இல்லை நீலம், நீலமேதான்!” என்று கூச்சலிட்டான் இரண்டாவது ஆள்.

இப்படி இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வேறொரு மனிதன் வந்தான்.

இரண்டு மனிதர்களும் அഖனை அருகில் அழைத்தார்கள்.

“ஐயா, ஓந்தி சிவப்பு நிறம் தானே!” என்று கேட்டான் முதல் ஆள். “ஆமாம்” என்றான் புது ஆள்.