பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 12.4.85 '89 நம்ஊர்ச் சாப்பாடு இரண்டு நாளாக இங்கே YMCA'வில் உண்டு மகிழ்ந்தேன். பின் இதை நடத்தும் தலைவர் திரு. தாமஸ் அவர்களை இரு செயலாளர்களுடன் கண்டேன். அன்ைவரும் சென்னையில் பயின்றவர்கள். எனவே நான் பச்சையப்பன் கல்லூரியிலிருந்து வந்தவன் என்றதும் என் பெயரை அவர்களே சொல்லிக் கேட்டனர். நான் ஆம்: என்றேன். முதல்நாள் தலைவர் பேசிய உரையின் உணர்வைச் சுட்டி, அவர் செயல் நன்கு சிறக்க என வாழ்த்தி னேன். பின் திரு. ஞான சூரியன் அவர்கள் மறுபடியும் அறைக்கு வந்து 8.30வ்ரை பேசிக் கொண்டிருந்தார். நாளை காலை திரு. தமிழ்மணியிடம் சொல்லத் தக்காரை அனுப்புவதாகவும் சில இடங்களை நேரில் காண வேண்டும் எனவும் சொல்லிச் சென்றார். தெலைபேசியில் இன்று தொடர்புகொண்ட திரு. கண்ணன் அவர்களும் கிருபாகரன் அவர்களும் ஞாயிறு காலை - நாளை நான் தங்க்ப் போகும் இடத்திற்கு வருவதாகச் சொன்ன்ார்கள். அன்று பல தமிழ், அன்பர்களைக் காண ஏற்பாடு செய்திருந்தனர். வெளியே சற்றே குளிராயிருப்பினும் அறையில் வெம்மை இருந்தது. எனவே நான் 9 மணி அளவிலே உறங்கத் தொடங்கிவிட் டேன். காலை 4.30க்கு எழுந்தேன். -