பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 13.4.85 விடியற்காலை முறைப்படி எழுந்து, காலைக்கடன்களை முடித்துக் கொண்டு 7.30 மணி அளவில் நேற்றைய குறிப்புக் களை எழுதி முடித்து, நண்பர்களை எதிர்நோக்கி இருந்தேன், வந்தனர். திரு. சுந்தரம் என்னும் அன்பர் 9 மணி அளவில் வந்தார். காலைச் சிற்றுண்டி முடித்து நின்ற நான் என் அறையினைக் காலி செய்துவிட்டு அவருடன் புறப்பட்டேன். பாதாள ரெயில் வழியே அவருடன் சென்றேன். அவர் புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் குடும்பம் ஊரில் உள்ளதென்றும் மூத்தமகன் திருப்பத்தூர் (மதுரை அடுத்தது) கல்லூரியில் பி. எஸ்சி படிக்கிறான் என்றும் கூறினார். தீவிரத் தமிழ்ப்பற்றும் நாட்டு வளர்ச்சியில் நாட்டமும் கொண்டவராக இருந்ததோடு, இன்றைய. தமிழக அரசியல்பற்றியும் நன்கு அறிந்திருந்தார். நெடும் தூரம் சென்றபிறகு ஒரன்பர் - திரு. இரத்தினம் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே பெரியார், அண்ணா போன்ற தலைவர்தம் படங்களுடன் திருவள்ளுவர் படமும் பெரிய அளவில் மாட்டப்பெற்றிருந்தன. அப் பகுதி யில் பல தமிழர்கள் வாழ்கின்றார்களென்றும், பெரும்பாலும் சிங்கப்பூரில் இராணுவத்துறையில் வாழ்ந்து, சிங்கப்பூர் விடுதலை அடைந்த ஞான்று அவர்களுள் விரும்பியவரே இங்கே குடியேற்றினார்களென்றும் கூறினர். மேலே சொன்ன சுந்தரம் அவர்களும் அவ்வாறு வந்தவரே. இருவரும் வேறு சில அன்பர்களும் திராவிட கழகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் என அறிந்தேன். இப் பகுதியில்