பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 13-485 93 ஆயினும் இங்குள்ள தமிழர் என்பவரில் சிலர் ஒற்றுமை இல்லா நிலையினையும் சுட்டினர். தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியாளாரும் இங்கே தங்கி வாழும் நிலையில் இவர் களும் தம்மைத் தமிழர் எனவே கூறிக்கொள்ளுகின்றனர்; எனினும் தமிழ்வளர்ச்சியில் அதிகமாகப் பங்கு கொள்ளா திருப்பதோடு, தமிழரிடத்தில் பிளவு காணும் செயல்களை யும் சிலர் செய்கின்றனர் என்று வருத்தத்தோடும் கூறினர். தமிழ் நாட்டிலிருந்து சில தலைவர் செல்லும்போது, அந்த வேறுபாட்டு உணர்ச்சியுடனேயே அவர்கள் செயல்படு வதாக அறிந்தேன். நான் தங்கியிருந்த திரு. இரத்தினம். அவர்கள் வீட்டில் அடிக்கடி தமிழ்நாட்டுத் தலைவர்கள் வந்து தங்கிச் செல்வார்களாம். அமைச்சர் நெடுஞ்செழியன், விடுதலை வீரமணி போன்றோர் அண்மையில் வந்து சென்றனர் என்றனர். இவ்வாறே.தமிழறிஞர் சிலரும் வந்து தங்குவது உண்டு போலும். இப் பகுதி தமிழ்நாட்டை போன்றே இருந்தது. தமிழ்நாட்டுக் காய்கறிகள் பிற பொருள்கள் அனைத்தும் கடைகளில் விற்கக் கண்டேன். இங்கே யாரும் எளிதில் தமக்கென ஒரு வீட்டினை வாங்கிக் கொள்ளமுடியும் என்றும் அதற்கு வேண்டிய தொகையை அரசாங்கம் வங்கிகளின் மூலம் குற்ைந்த வட்டிக்குத் த்வணை முறையில் (25 ஆண்டுவரை) தருகிறதென்றும் எனவே பல தமிழர்கள் இப்பகுதியில் வீடுகள் வாங்கியுள்ளார்களென்றும் கூறினர். கடன் வாங்குவதற்கோ பதிவு செய்வதற்கோ பிற்iற்றிற்கோ கையூட்டு - லஞ்சம் - தரும் கெர்டும் பழக்கமோ பிறவேர் இல்லாது யாவும் எளிமையாக முடிவுறுவ் தையும் சுட்டினர். இங்குள்ள அரசாங்கம் பிற நாட்டிலிருந்து வந்து குடியேறும் மக்கள்ையும் தம் மக்களைப்போன்று ஒத்து நடத்தும் உயர்நிலை எண்ணி வியந்து போற்றிப் பாராட்டினேன். - அரசாங்கம் செய்யும் வேறு சில நல்ல வேலைகளும் உள்ளன. குழந்தை ஒன்றுக்கு வார்த்துக்கு ஆறு பவுன் வீதம் தந்து அவர்களுக்கு வேண்டிய உணவு உடிை முதலியன பெற