பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இண்டன் 18.4-85 95. எத் தொழிலைச் செய்தாலும் மன்னிய சீர்த் தமிழ்மொழியை ஆறவாமை பொருளன்றே என்ற உணர்ச்சியோடு இங்குள்ள த்மிழர் வாழ முற்படுகின்றனர். இன்றையபொழுது, வெளியே தூரலும் மழையும் இருந் தமையாலும் முன் ஏற்பாட்டின்படி, தமிழ்ப்பள்ளியின் குழந்தைகளை அவர்தம் பெற்றோருடன் சுற்றுலா அழைத் துக்கொண்டு அன்பர் பலர் சென்றமையாலும் நான் வீட்டி. லேயே இருந்தேன். இரண்டு வேளைகளில் இரு அன்பர்தம் இல்லத்தில் உணவு கொண்டேன். பிற்பகலில் வீடியோ' மூலம் எடுத்துவைத்திருந்த சிவாஜிகணேசன் நடித்த "படிக்காத பண்ணையார்' படத்தினை டி. வி.'யில் இட்டுக் காட்டினர். சென்னையில் எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் படம் பார்த்த நான் இங்கே இலண்டனில் இப்படத்தைநல்ல படத்தைப் பார்த்ததை நினைத்தேன். இந்த நாட்டில் விளையாட்டுப் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இன்று காலை நான் பாதாள இரெயிலில் வந்தபோது, ஒரு நிலையத்தில் வண்டியில் உள்ள அனைவரும் வேகமாக இறங்கிச் சென்றனர். நான் நண்பரை அது பற்றிக் கேட்டேன். பக்கத்தில் கால்பந்து போட்டி நடைபெறப்போவதாகவும் அதற்கென இவ்வளவு கூட்டம் என்றும் சொன்னார். மேலும் இதில் ஆடுபவர் யாவராயி னும், காண்பவர் தம்முள் கட்சி பிரிந்து போட்டியிட்டு, சண்டையிட்டுத் தொல்லைப்படுவர் என்றனர். தோற்ற கட்சி வழிநெடுக மக்கள் பொருள்களுக்கும் இரெயில் நிலை யம் பெட்டிகள் முதலியவற்றிற்கும் பெருஞ்சேதம் விளைப் பார்களாம். இங்கே போலீசுக்குத் துப்பாக்கி கிடையாது: வெறும் தடி மட்டும் உண்டு. அதையும் தம் விருப்பம்போல் மக்களை அடிக்கப்பயன்படுத்த முடியாதாம். எனவே மக்கள் மனம்போன போக்கில் போகின்றனர் போலும். சுட வேண்டிய நிலை நேர்ந்தால் போர்த்துறையினர் வரவ்ேண்டு ԼՈՈ ԼՈ •