பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பொதுவாக மக்க்ள் அரசியல் அறிவும் தெளிவும் பெற்ற வராக உள்ளனர். பெற்ற மக்கள் 16 வயதுக்கு மேற்பட்டால் அவர்களைத் தனியே பிரித்து விடுவர். தந்தை யார்? தாய் யார்? என்று கேட்கும் அளவுக்கு வாழ்க்கை பிரிந்துவிடும். வேலை இல்லாவிட்டாலும் அரசாங்கம் பணம் உதவுகிறது: வயதானாலும் உதவுகிறது. எனவே வாழ்க்கை பற்றி யாருக் கும் கவலை இல்லை. குடும்பப் பிணைப்பு- பாசம் - பந்தம் என்பது இந்நாட்டு மக்களிடம் காண முடியாதன. ஆனால் இன உணர்வும் நாட்டு உணர்வும் உள்ளன போலும். இங்கே வேலை இல்லாத்திண்டாட்டம் பெருகி வருகின்றதெனவும், எனவே, இளைய தலைமுறையின்ர் வெளிநாட்டு மக்கள் இங்கே வருவதை விரும்பவில்லை எனவும் அதனால் பிற நாட்டு மக்களுக்குப் பலமுறையில் தொல்லைகள் தருகிறார்கள் எனவும் அறிந்தேன். மாலையில் சுற்றுலா சென்றவர் திரும்பினர். திரு வீர் சிங்கம் அவர்கள் மலேசியா நண்பர் ஒருவருடன் வந்தனர். அவரும் என்னைப் போல் இலண்டன் காணவந்தார் எனவும் நாளை பாரிஸ் செல்கிறார் என்றும் கூறினர். அனைவரும் உணவு கொண்டோம். (நான் சைவ உணவு கொள்வதால் சிலருக்கும் சற்றே தொல்லை தந்தேன்) திரு. வீரசிங்கம் ஒருவரே என்போன்ற சைவ உணர்வினர். பசியாறுங்கள்' என உணவுண்ண அழைக்கும் சிறப்பினை எண்ணினேன். உண்வு முடித்தபின் அன்பர் ஜேசுதாசு அவர்கள் இல்லம் சென்றோம். அங்கே எனக்குத் தங்க, தனி அறை ஏற்பாடு ச்ெய்திருந்தனர். நல்ல அன்பர்; நல்ல குடும்பம்: அன்புடன் ஏற்று ஆவன செய்து உதவினர். அன்பர் அவர்கள் தமிழ்ப் பள்ளிக்கும் தமிழ்முன்னேற்ற்க்கழகத்துக்கும் செயலாளராக உள்ளமையின் அந்த நிகழ்ச்சிகள் பற்றியெல்லாம் விளக்கிக் கூறினார். அரசாங்கத்திடம் முறையிட்டு, டி.வி., வானொலி முதலியவற்றில் தமிழ் அதிகமாக நிலைத்த இடம் பெறவும், முயல்வதாகவும் கூறினர். நானும் அந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு அவர்தம் முயற்சி வெல்வதாக" என