பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 14.4-85. இன்று கால்ை முறைப்படி 4.30க்கே எழுந்தேன். காலைக் கடன்களையெல்லாம் முடித்துக்கொண்டு, நேற்றைய குறிப்பினை எழுதி முடித்தேன். மணி 7.30க்குப் பிறகு சிற்றுண்டி கொண்டு, 9 மணிக்கு மேல் வெஸ்டுமினிஸ்டர் ஆபெ, நூல்நிலையம், பொருட்காட்சி முதலியன கண்டுவர நினைத்தேன். எனினும் வெளியே குளிர்காற்று மிகக்கடுமை யாக அடித்ததாலும், எனை அழைத்துச் செல்ல இருந்த அன்பர் உடல்நலக்குறைவாலும் பல அன்பர்கள் எனைக் காண வர ஏற்பாடு செய்திருந்தமையாலும் வெளியில் புறப் படவில்லை. நான் தங்கிய வீட்டுத் தலைவரும் துணைவரும் பிள்ளைகளும் என்னிடம் அன்பும் பரிவும் காட்டி மகிழ்ந்த னர். ஐந்து வயதுடைய குழந்தை ஆயிலின் என்னிடம் ஒட்டிக்கொண்டு. அன்புகாட்டி விளையாடினாள். திருக் குறள் நாற்பது பாட்டு வரையில் மனப்பாடம் செய்திருந் தாள். வேறுபல பாடல்களையும் பாடினாள். அவளுடன் பொழுது போவதே தெரியவில்லை. அவர் தந்தையாரும் உடன் இருந்தார். டாக்டர் ஞானமூர்த்தி அவர்கள் மகன் திரு. கிருபாகரனுடனும் பிறருடனும் தொலைபேசி வழியே பேசினேன். கிருபாகரன் தம்பி லிவர்பூரிலிருந்து வந்ததாக வும் எனவே வருவது கடினம் என்றும் உதவி அவசியம் தேவையாயின் புறப்பட்டு வருவதாகவும் கூறினார். நான் இங்கே இலண்டனில் நண்பர்களுடன் தங்கிய காரணத்தால் அவர் நெடுந்தொலைவு வரத்தேவை இல்லை என்றும் கோவைக்கு நாளையே க டி த ம் எழுதுவதாகவும்