பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர். திரு. வ. அய். சுப்பிரமணியம் அவர்கள் அறிமுக உரை பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், தமிழ்ப் பல்கலைக் கழக ஆளுநர் கூட்டம் முடிந்ததும், ஒரு நாள். தாம் பல நாடு களுக்குச் சென்றுவரத் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த நாட்டு அறிஞர்களுக்குக் கடிதமெழுதி அறிமுகப்படுத்தி உதவுமாறும் கேட்டுக் கொண்டார்கள். தமிழ்ப் பல்கலைக் கழக வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்குவதற்கு, இத்தகைய பணயம் வழி உலகில் வாழும் தமிழர்கள், தமிழாய்வாளர்கள் முதலியவர்களின் கருத்தை அறிதல் நலமென்றும் அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது தமிழ் ஆய்வுத் தொடர்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம் நல்கும் வாய்ப்பு, எத்தகையத் திட்டத்தால் உலகின் பலபகுதி களில் வாழும் தமிழர்களைத் தாயகத்தோடு நெருங்கிய தொடர்பு கொள்ளச் செய்ய இயலும் முதலான கூறுகளை, கவனித்து குறிப்பு ஒன்று தருமாறும் கேட்டுக் கொண்டேன். பல நாட்டுப் பயணம் இந்த முதிய வயதில் மேற்கொள்ளும் மன உரத்தைப் பாராட்டினேன். உடல் நலத்துடன் திரும்ப வேண்டும் என்றும் வாழ்த்தினேன். 呜 பேராசிரியர் பரமசிவானந்தனார் 3.4.85ல் புறப்பட்டு 12.6.85ல் திரும்பினார்கள். செப்டம்பர் மாதம் முதல் நாளில் தனது நூலின் முதல் படியைக் காட்டினார்கள். இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு முதலிய தேசங்களுக்கு பலமுறை சென்றவர்கள் கூட அறியாத பல செய்திகளை ||