பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 14-4.85 - 99 சொன்னேன்.அவரும் எழுதுவதாகச்சொன்னார்.பின் BBC' தமிழோசைபற்றித் திரு. சங்கரமூர்த்தியோடு தொடர்பு கொண்டேன். அவர்கள் நாளை பகல் 1 மணி அளவில் நிலையத்துக்கு வருமாறும் பேச்சு (அ)பேட்டியினைப்பதிவு செய்து நாளை மாலை அல்லது மறுநாள் காலை) கீழைநாடுகளின் ஒலிபரப்பில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். பின் அன்பர் பலர் வந்து பேசிக் கொண்டிருந்தனர்.பகல்உணவுக்குள் பல அன்பர்கள்தொலை பேசியில் தொடர்பு கொண்டனர். பகல் 1 மணி அளவில் உண்வு கொண்டேன். பின் அனைவருடன் பல பொருள் கள் பற்றி - இலக்கியம், அரசியல், சமூகவியல், வாழ்வியல், பற்றிப் பேசிக்கொண்டே இருந்தேன். திரு. ஜேசுதாஸ் அவர் கள் வேறு ஒரு கூட்டத்துக்குச் செல்வதாகவும் கல்வித்துறை அதிகாரி ஒருவன்ர உடன் அழைத்துக்கொண்டு 4 மணிக்கு வருவதாகவும் கூறிச்சென்றார். திரு.கண்ணன் அவர்களுட்ன் (திருமதி பொன்னையன் முக்வரி தந்தவர்)தொலைபேசியில் தொடர்புகொண்டேன். உடன் அவர்தம் மாமனாருடன் காரில் வந்து தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரவு உணவுண்டு செல்ல வேண்டும் என வற்புறுத்தினார். நான் வேறு சில அன்பர் களைக் காணவேண்டியிருப்பதால் உடன் திரும்ப வேண்டிய நிலையினைச் சொன்னேன். பின் சிற்றுண்டி அளித்து ஜேசுதாசு அவர்கள் வீட்டிற்குத் திரும்ப அவர்களே அழைத்து வந்துவிட்டனர். திரு. முருண்கயன் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அவருடன் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். வேறு சில அன்பர்களும் வந்தனர். அரசாங்கத்தே கல்வித்துறையில், உயர் அதிகாரியாகப் பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. மணியம் என்பவர் 5 மணி அளவில் வந்தனர். அவரொடு கல்விநிலைபற்றியும் ஆசிரியர்கள்பற்றியும் கலந்து பேசினேன். ஆசிரியராகத் தகுதி வாய்ந்தவர் யாவர் என விளக்கினார். குறைந்தது பட்டப்படிப்பு பெற்று ஓராண்டு