பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 14-4.85 103 பேசிக்கொண்டிருந்தேன், திரு. ஜேசுதாசு அவர்களும் உடனிருந்தார். இங்குள்ள தமிழர் வாழ்வு, வளன், பிறவற்றையெல்லாம் ;பேசிக்கொண்டிருந்தேன். மேலும் திரு.வீரசிங்கம் அவர்களுக்குச்சென்னையில் வேண்டிய உதவி களைச் செய்வதாகக் கூறினேன். இரவு 11 மணி அளவில் அவர் விடை பெற்றுச் சென்றார். நான் படுக்கைக்குச் சென்றேன். கடந்த நான்கு நாட்களிலும் இங்கே இலண்டன், நகரத்தில் வாழும் தமிழ் மக்களைக் கண்ட நிலையில், நான் இவர்கள் மொழி, இனப்பற்றினை உணரமுடிந்தது. உண்மையிலேயே இவர்கள் உணர்வும் செயல்களும் போற்று தற்குரியன. இவர்தம் உணர்வின் வழியே செயலாற்றத் தொடங்கின் தமிழ்நாடு உயர்ந்து ஓங்குவது என்பது உறுதி. 'தமிழ் தமிழ் என்று மேடைகளில் பேசி, அத் தமிழால் தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்வார் தமிழ் நாட்டில் உள்ள்மை போன்று, இங்கே வெறும் பேச்சினைப் பேசி, விண்காலம் கழிக்காது, உளத்தால் செயலால் தமிழுக்குத் தொண்டாற்றுகின்ற இவர்கள் எண்ணங்களெல்லாம் நிறை வேறும் நாள்வரின் உலகெங்கனும் தமிழ் போற்றப்பெறும் என்பது உறுதி என நினைத்து உறக்கம் கொண்டேன்.