பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரிச் 15-4-85 இன்று மாலை இலண்டனை விட்டுப் புறப்படவேண்டும் அதற்குள் சில முக்கியமான இடங்களைக் கண்டு, வானொலி சென்று பேசி, விமானத்துக்குப் புறப்பட வேண்டும். காலைக் கடன்களையெல்லாம் முடித்துக்கொண்டு, சிற்றுண்டி (இட்லி) கொண்டு தயாரானேன். திரு. ஜேசுதாசு அவர் களும் அவர் துண்ைவியாரும் தத்தம் பணிநோக்கி 7 மணிக்கே புறப்பட்டனர். திரு. வீரசிங்கம் வந்தார்: சென்னைக்கு வரப்போவதைப்பற்றிப் பேசினார். பின் நாகதேவன் அவர் கள் வந்து என்னை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். வெஸ்டுமினிஸ்டர் அபே உள்ள்ே சென்று அனைத்தையும் கண்டேன். பாராளுமன்றக் கட்டிடத்துக்கு முன்னே நின்று வானோங்கிச் சிறந்து நின்ற அதன் பெருமையினை உன்னி னேன். பின் அங்கிருந்து பொருட்காட்சிச்சாலைக்குச் சென்றேன். உலக நாடுகள் பலவற்றுள்ளும் மிகப்பழங்காலந் தொட்டு மக்கள் பயன்படுத்திய கலன்கள், ஆபரணங்கள், கருவிகள், போர்க்கருவிகள் போன்றவை முறையாக வைக் கப் பெற்றிருந்தன. கீழைநாடுக்ளில் சீன நாட்டுப் பொருள் களே அதிகமாக இருந்தன. நம் இந்திய நாட்டுத் தொல் பொருள்கள் அவ்வளவு அதிகமாக இடம் பெறவில்லை. சில, விடங்கள் துப்புரவு செய்வதற்கெனக் காண்பார் ச்ெல்ல முடியாது தன்ட செய்யப்பெற்றிருந்தன. ஒருவேளை அங்கே ஒரு சில இருக்கக்கூடும் என நினைத்தேன். மத்தியதரைக் கடல் நாடுகள், பிற ஐரோப்பிய நாடுகள் இவற்றிலிருந்தும் சிறப்பாக் இங்கிலாந்து நாட்டிலிருந்தும் சேகரிக்கப்பெற்ற