பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரிச் 15.4.85 - 105 தொல்பொருள்களே நிரம்பி இருந்தன. முழுவதையும் ஊன்றிக் காண வேண்டுமாயின் குறைந்தது மூன்று நாட் களாவது தேவை. நான் இரண்டொரு மணியில் எவ்வாறு காண இயலும்? இந்திய அரசாங்கம் - சிறப்பாகத் தமிழக அரசு முயன்று, நம் தொல்பொருள்களை உலகறியச் செய்ய வழிவகை காண வேண்டியது அவசியம் என்று மட்டும் எண்ணினேன். ... - . - . அடுத்து நூல்நிலையம் புகுந்தேன். எனக்கு இது நம் 'நேஷனல் நூல் நிலையத்தைவிடப் (கல்கத்தா) பெரிய தாகத் தெரியவில்லை. எனினும் ஆங்கில நாட்டின் மிகப் பழங் காலந்தொட்டு உண்டான சாசன ஏடுகள்-அச்சு வரலாற்று வளர்ச்சி நெறியில் அமைக்கப்பெற்ற ஏடுகள்-கீழைநாட்டு இலக்கியங்கள்-பல காட்சிப் பொருள்களாக வைக்கப்பெற்றி ருந்தன. அங்கேயும் இந்திய ஏடுகள் இருந்த பகுதி துப்புரவுக் காக வைக்கப்பெற்று யர்ரும் காணமுடியாத நிலையில் இருந்தது. நான் பார்த்த பகுதியில் 18ம் நூற்றாண்டின் நன்னைய பட்டருடைய தெலுங்கு ஒலைச்சுவடியும் கூர்மா அவதாரம் பற்றிய ஒலைச்சுவடியும் (மிகப்பழங்காலத்தியது) இருந்தன. கூர்மா அவதாரத்தமிழ் ஓலைச்சுவடி நன்கு சுருள் செய்யப்பெற்று ஆமைவடிவத்தாலாகிய பித்தளைச் சுருளில் அடக்கி வைக்கப்பெற்றிருந்தது: மிக அழகாக இருந்தது. வேறு தமிழ் ஏடுகள் இருப்பதாகவும் அவைகள் அத்துப்புரவு செய்யும் பகுதியில் உள்ளதாகவும் கூறினர். மற்றும் நூலைக் கட்டுசெய்யும் வகை (Binding)யினையும் அதன் வளர்ச்சி யினையும் விளக்கிக் காட்டும் முறையும் ஒருபக்கம் அமைக்கப் பெற்றிருந்தது. - இவற்றையெல்லாம் காண ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. இலண்டன் வானொலி நிலையத்தில் (BBC) என் நேர்முகச் செவ்வியினைப் பதிவு செய்ய நேரம் 1.30 எனக் குறித்திருந்தமையின், உடனே அந்த இடத்திற்கு விரைந்து சென்றோம். அங்கே அத் துறைக்கு உரிய திரு. சங்கரமூர்த்தி அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார். அவரும் அவருக்குத் துணையாக நின்ற