பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள். மற்றொரு செல்வியாரும் மிக விரைவாக இயங்கிப் பணி களைச் செய்து வந்தனர். தம் பிற வேலைகளையெல்லாம். விடுத்து, நான் சென்றதும் என்னைப் பதிவு அறைக்கு அழைத்துச் சென்று, நேர்முகச் செவ்வியைத் தொடங் கினர். நான் உலகப்பயணம் மேற்கொண்டது பற்றி யும், பார்த்த நாடுகள் பற்றியும், ப்ார்க்க இருக்கும் நாடு கள் பற்றியும் கேட்டதோடு, உலக முழுவதிலும் பரவியுள்ள தமிழ்ச் சமுதாயத்துக்கு நான் கூற வேண்டிய செய்தியினை யும் கேட்டுப் பதிவு செய்துகொண்டனர். தமிழ் உணர்வு பொதுவாக மங்கிவருவது பற்றியும் அதை வளர்க்கத் தமிழக அரசும் தமிழ்ப்பல்கலைக் கழகமும் செய்ய வேண்டிய செயல் 'கள் பற்றியும் பிறவகையில் தமிழ் ஆக்கம் பெற ஆற்ற வேண்டிய முறைகள் பற்றியும் ஒரளவு சுட்டிக் காட்டினேன். அன்பர் சங்கரமூர்த்தி அவர்கள் அவர்தம் மேலுள்ள ஆங்கிலேயருக்கு என்னை அறிமுகப்படுத்தினார். நானும் அவரை நம் நாட்டுக்கு வருமாறு அழைத்து விடை பெற்றேன். திரு. சங்கரமூர்த்தி அவர்கள் தமிழ்நாட்டில் தென்காசியினைச் சேர்ந்தவர் எனவும் சென்னை வானொலி நிலையத்திலிருந்த திரு. துறைவன் அவர்கள் இளவல் எனவும் அறிந்தேன். அவர்தம் பணிவும் பரிவும் சுறுசுறுப் பான பணிநிலையும் என்னைக் கவர்ந்தன. இன்று மாலை 5 மணிக்குமேல் என் செவ்வி, ஒலிபரப்பப்படும் எனவும் கீழை நாட்டுமக்கள் அனைவரும் கேட்டு, தம் கருத்துகளை எழுது வரெனவும் குறித்தார். நான் அவரிடமும் உடனிருந்த அம்மையாரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். வழியில் உணவுக்தடையில் உணவுகொண்டு நேராக விமான நிலையத்துக்குப் புறப்பட்டேன். திரு. நாகதேவன் அவர்கள் வழியனுப்பி வைத்தார். விமான நிலையத்துக்கு 4.30 மணி அளவில் வந்து என் பயணம் பற்றி உசாவினேன். (British Airlines) ஆங்கில விமான வழி நியூயார்க் நேராகச் செல்லலாம் எனவும் ஆயினும் பயணத்தொகையில் யாதொரு கழிவும் இராதெனவும் கூறினர். நான் நியூயார்க்கில் உள்ள