பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 Ꭷy അിൽ எழுபது நாட்கள் நானும் கடந்த நான்கு நாட்கள் இந்த உலகப் பெரு நகராகிய இலண்டனில் கழிந்த விதத்தினையும் பெற்ற அன்பர்தம் கூட்டுறவினையும் பிறநலன்களையும் எண்ணிக் கொண்டே உள் விமானநிலையம் அடைந்தேன்; விமானத்தி லும் ஏறினேன். உள் அமர்ந்ததும் என் சோர்வறிந்தோ என்னவோ பணியாளர் இருமுறை நல்ல குளிர்ந்த பழரசம் தந்தார். பிறகு முறையான உணவு தரப்பெற்றது. வேர்க் கடல்ை, பாதம்பருப்பு போன்ற பல நன்கு வறுக்கப்பெற்றுச் சுவையூட்டப் பெற்று விமானத்தில் தரப்பெறுகின்றன. சூரிச் நோக்கிப் பறந்த விமானம் 1 1/4 மணி நேரத்தில் சூரிச் அடைந்தது. இங்கே அதிகக் கூட்டம் இல்லை.இந்த நேரத்தில் இந்த ஒரு விமானம் தான் போலும். நான் சுவிஸ் விமான' அலுவலர் வழியே எனக்கென ஒதுக்கிய ஒரு விடுதிக்கு, (Hotel Movembick) சிறு உந்துவண்டி வழி அழைத்துச் செல்லப்பெற்றேன். விடுதி மிகப்பெரியது; உயர்ந்தது. நான் இதுவரையில் இதுபோன்ற விடுதியில் என்றும் தங்கியதில்லை. நம் சென்னைநகரில் நுங்கம்பாக்கத்திலுள்ள பெரு விடுதிகளை விஞ்சி நின்றது நான் இங்கே தங்கும் செலவு அனைத்தும் 'சுவிஸ் விமான நிறுவனரைச் சார்ந்தது. உடன் நியூயார்க் விமானம் இல்லையாதலால் இங்கே கொண்டுவந்து தங்க வைத்தனர். பெரும் செல்வம் படைத்தவர் தங்கும் இந்த விடுதியில், பத்து அடுக்கு உள்ள கட்டிடத்தில் ஒன்பதாவது அடுக்கில் (அறை 939) தங்கினேன். அறைக்குச் செல்லுமுன் பழக் கலவையும் காப்பியும் அருந்தினேன். அறையில் தங்கி நாற்புறமும் பார்த்தேன். எங்கும் ஒளி விளக்கம்; ஊர்திகள் விரைவு. உலகில் பல பாகங்களிலிருந்தும் இங்கும் பல மக்கள்.பல வகைகளில் வந்து தங்குகின்றனர். எனவே இதுபோன்ற விடுதிகள் பல இங்கே உள்ளனவாம். ஒரு நாளைக்கு, ரூபாய் ஆயிரமும் அதற்கு மேலும் கட்டணம் இருக்கும் என்றனர்.