பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 11.4.85 காலைக்கடன்களை முடித்துக்கொண்டு,8-30 மணி அளவில் காலைச் சிற்றுண்டியினையும் முடித்துக்கொண்டேன். இந்த விடுதி முழுதும் குளிர்சாதனம் செய்யப்பெற்றிருந்த தால் மிக எளிமையாக இரவு பகல் வேறுபாடுஇன்றிக் கழிக்க முடிந்தது. இரவு போர்வை இல்லாமலேயே தாங்க முடிந்தது. எனினும் சிற்றுண்டி முடித்து வெளிவந்ததும் மிகக் குளிர்ந்த காற்று வீசிற்று. அப்போதுதான் உள்ளிருந்த பலரும் மிகத் திண்ணிய கோட்டும் அதற்குமேல் ஒருமுழுக்கை சட்டையும் இட்டுக்கொண்டிருந்த காரணம் புரிந்தது. சூரிச் நகரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வர எண்ணிய எண்ணம் நிறைவேற வில்லை. எனினும் விடுதி உயரிய மேட்டில் இருந்ததால் ஒரு வகையில் ஊரின் பெரும்பகுதியினைக் காண முடிந்தது. மேல் தளத்திலிருந்தும் நன்கு காண முடிந்தது. விடுதியின் எதிரில் இருந்த பல பெருந்தொழிற்சாலைகளுக்குப் பணி புரிபவர் கள் காலை 7 மணியிலிருந்தே-பெரும்பாலும் கார்களில் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். ஒரு தொழிற்சாலையில் கார்கள் நிறுத்தப் பெருஞ்சாலையின் ஒரு பக்கம் பரந்த வெற்றிடமும் மறுபக்கம் பெரிய தொழிற்கூடமும் இருந்தது. (அது ஒரு கார் செய்யும் தொழிற்சாலை என்றனர்). கார் களை ஒரு பக்கம் விட்டு, சாலையைக் கடக்கும் தொல்லை இல்லாவகையில் மேம்பாலம் அமைத்துச் சாலையைக் கடக்க அந் நிறுவனத்தாரே ஏற்பாடு செய்திருந்தனர். கார் நிற்கு மிடத்தும் ஒவ்வொன்றிற்கும் தனித்தனிக் கோடிட்டு வரை யறை செய்ததோடு, தேவையானபோது ஒவ்வொருவரும்