பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 16.4.85 111 எடுக்க இடைவெளியிட்டும் இருந்தனர். எட்டுமணிக்குத் தொழிற்சாலை நேரம் போலும். 6-30 அல்லது 7க்கு வரத் தொடங்கிய கார்களின் எண்ணிக்கை 8 மணி அளவில் 1500க்கு மேலாக இருக்குமாறு பெருகிற்று. அனைவரும் இயந்திரங்கள் போன்று இயங்கிக் கொண்டிருந்தனர்: கார் வருவதும் நிறுத்தப்பெறுவதும் அவர்கள் விரைந்து செல்வதும் ஒரு அழகிய காட்சியாக இருந்தது. பொதுவாக இங்கே மேலை நாட்டு மக்கள் கடமை உணர்ச்சியோடு, குறித்த நேரத்தில் அலுவலகம் சென்று பணி தொடங்கு வதை முறையாகக் கொண்டுள்ளன்ர் என முன்னரே சுட்டி யுள்ளேன். அப்படியே உள் சென்ற பிறகும் வீண்பொழுது போக்குவதோ கதைப் புத்தகங்கள் படித்துக்கொண்டிருப் பதோ அடிக்கடி காண்டீன் பக்கம் செல்லுவதோ இல்லை. இங்கே சம்பளம் மணிக்கணக்கில் தரப் பெறுகின்றது. சில விடங்களில் செய்யும் பொருள்கள் அடிப்படையில் வழங்கப் பெறுகின்றது. அனைவரும் சுறுசுறுப்பாக அந்தக் குளிரிய் காலை வேளையிலும் இயங்கிக் கொண்டிருந்தனர். நான் 10 மணிக்கு மேல் அறையினைக் காலிசெய்து விடுதி யினை விட்டுப் புற்ப்பட்டேன். குறைந்தது அன்று 800 ரூபாயாவது அந்த ஒட்டலுக்கு என் கணக்கில் சுவிஸ்" விமான நிலயத்தார். தந்திருப்பார்கள். அவர்களுக்கு அடுத்த நியூயார்க் நீண்ட பயணத்திற்கு ரூ. 6000மாயினும் கிடைத்' திருக்குமல்லவா! லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு ஒரு நாளில் ஏழு பெருவிமானங்களும் சூரிச்சிலிருந்து ஐந்து விமானங்களும் புறப்படுகின்றன. எனவே போட்டி கடுமை போலும்.இப்படியே பல தலைநகர்களிலிருந்து பல விமானங் கள் (நம் ஏர் இந்தியாஉட்பட நியூயார்க் நகருக்குப் பறந்து கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றன. நான் விமான நிலையத்துக்குச் சற்று முன்னரே வந்துவிட்டேன். என் விமானம் 12-45க்கு புறப்பட வேண்டும். அதற்குமுன் ஒரு பிரிட்டிஷ் விமானம் 11.30க்கு நியூயார்க் நகருக்குப் புறப் பட்டது. - - -