பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூயார்க் 16.4.86 113 உண்டாயிற்று. உடலைத் தூய்மையாகவும் தெளிவாகவும்: வைத்துக்கொள்ள, அவ்வப்போது மருந்திட்ட மெல்லிய தாள்கள், துணிகள் வழங்கப்பெற்றன. பத்திரிகைகள், இதழ்கள் போன்றவை எண்ணற்றவகையில் - படிப்போர் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்துக்கொள்ள நிறைய இருந்தன. இந்த விமானத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் போர்த்திக் கொள்ள நல்ல கம்பளிப் போர்ன்வ அளித்த தாகும். இதை இங்கேதான் பார்த்ததால் ஏனென்று கேட்டேன். குளிர் அதிகமாகும் என்றும் நெடுந்தொலைப் பயணத்தில் இதைப் போர்த்திக்கொண்டால் நன்கு உறங்க லாம் என்று கூறினர். அப்படியே பலர் நன்கு போர்வை யிட்டுக்கொண்டு உறங்கினர். நான் அதைப் பயன்படுத்த வில்லை; உறக்கமும் வரவில்லை. நெடுகி விமானத்தில் படக் காட்சிகளையும் காட்டிகொண்டே வந்தனர். விமானத்தில் நான் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும் நிலையினை எண்ணி எண்ணி நின்றேன். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட சிறு கடலை அனுமன் கடந்த நிலையினைக் கடல் தாவு படலத்தில் அழகுறப் பாடிய கம்பன் இன்று இருந்தால் இந்தப் பயணத்தை எவ்வளவு அழகாகப் பாடுவன் என என் உள்ளம் நினைத்தது. மேகங் களுக்கு இடையிலும் மேகங்களுக்கு மேலும் 20,000, 25,000 அடிகளுக்கும் உயரமாக விமானம் செல்லும்போது . ஆடாமல் அசையாமல் பறக்கும்போது . நாம் தரையில் இருப்பது போலவே உணர்கின்றோம். விமானத்தில் அமர்ந்து எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம், புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே என்ற தாயுமானவர் அடிகளை எண்ணினேன். உண்மையிலேயே உலக எண்ணங்களை எல்லாம் கடந்த ஒரு அமைதி என் உள்ளத்தில் குடி கொண்டது. புது உலகம்' என்றும் 'பொன் னுலகம்’ என்றும் வரலாற்றாளர்களாலும் அரசியல்வாதிகளாலும் பேசப்பெறும் அமெரிக்க நாடு செல்லும் நிலையில் . அப் புது ஏ.-8 - - -