பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூயார்க் 16-4.85 115 அவர்கள் 216ல் இருந்தார். அது இரண்டாவது மாடியில் இருந்தது (ஒவ்வொரு கட்டிடமும் ஏழு அடுக்கு உடை ய்னவாய், சுமார் 500 குடியிருப்புப் பகுதிகளைக் கொண் டிருக்கும் என்றனர்). அவர்தம் துணைவியாரும் இரு இளங்குழந்தைகளும் என்னை வருக' என வரவேற்றனர். நம் நாட்டுப் பலகாரங்களாகிய அடை,தேன்குழல் முதலியன தந்தனர். காப்பி உண்டு சற்றே இளைப்பாறினேன். 6 மணி அளவில் திரு. இராதாகிருஷ்ணன் அவர்கள் வந்தார். பிள்ளைகளும் அவரும் அவர் துணைவியாரும் அன்புடன் பழகினர். வேறு இடங்களுக்குச் செல்லவேண்டாமெனவும் தங்கும் ஐந்து நாட்களிலும் தங்கள் வீட்டிலேயே தங்கலாம். என்றும் கூறினார். பிற அன்பர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். பென்சில்வேனியாவிலிருந்து திருமதி டாக்டர் இராசம் அவர்கள் (பல்கலைக்கழகப் பேராசிரியர்) பேசினார் என்றும் என் வரும் நாளையும் பேசும் பொருளை: யும் பற்றி அறிய விரும்பினார் என்றும் நாளை மறுபடி தொலைபேசியில் பேச இருப்பதாகவும் கூறினார் அம்மையார் ஆர்வத்தினை அறிந்து போற்றினேன். பல்வேறு உலக நிலைகள், நியூயார்க்கில் ஐந்து நாட்களில் நான் செய்ய வேண்டிய வேலைகள் - பார்க்க வேண்டிய இடங்கள் அமெரிக்காவில் நான் காண வேண்டிய இடங்கள் போன்றவை பற்றித் திரு. இராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கினார்கள். 9 மணி அளவில் நல்ல உணவு நம் நாட்டு மரபின்படி உண்டேன். பிறகு நாளை செய்ய வேண்டிய பணிகள் பற்றி முடிவு செய்து அவர் அலுவலகம் செல்வதால், முன்கூட்டியே பல தகவல்களை அவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டேன். குழந்தைகளும் டி.வி. பார்த்துக்கொண்டும்தமிழ்நாட்டுப் பாடல்களை இசைக்கருவி யில் இட்டு எனக்குக் காட்டிக் கொண்டும் இருந்தனர். பத்துமணி அளவில் நான் இங்கேயே படுத்துக் கொண்டேன். அப்போது வெம்மையாயினும் இரவில் குளிரும் என்றும் இன்னும் கோடை முற்றும் கால் கொள்ளவில்லை என்று கூறி நல்ல போர்வையினையும் தந்தனர். படுத்த்தும் உடனே உறங்கிவிட்டேன். .