பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க்17.4.85 முறைப்படி காலை 5 மணிக்கு எழுந்து காலைக்கடன் களை முடித்துக்கொண்டு, குறிப்பினை எழுதி முடித்தேன். நேற்று நெடுந்துாரம் வந்த விமானக் களைப்பினாலும் மிகுந்த ப்னியும் குளிரும் இங்கே இருந்தமையாலும் சற்றே உடல் தளர்ந்த நிலையிலும் நான் எங்கும் வெளியில் செல்ல வில்லை. சிகாகோ, பிளடெல்பியா ஆகிய இடங்களிலிருந்து வந்த தொலைபேசிகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டும், இங்கே உள்ள அன்பர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டும் அறிவன அறிய முற்பட்டேன். பென்சில்வேனியப் பல்கலைக் கழகத்தே, தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றிய சூழ்நிலை, பணி, பயன்பற்றி 24-4-85 பிற்பகலிலும், (ஆங்கிலத்தில்) மறுநாள் காலை தமிழிலும் பேச வேண்டும் எனக் கேட்டனர். அதற்கெனக் குறிப்பினைத் தயார் செய்தேன். ஊருக்கும் இலண்டன் அன்பர்க்ளுக்கும் உள்ளுர் அன்பர்களுக்கு நான் இங்கே வந்த தகவலைக் கூறி, அவரவர் ஊர்களுக்கு வரும் நாளையும் செய்ய வேண்டிய பணியையும் பற்றித் கடிதங்கள் எழுதினேன். இலண்டன், உரோம் நண்பர்களுக்குநன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினேன். இன்று பெரும்பாலும் ஒய்வில் இருந்தேன் எனலாம். - திரு. இராதாகிருஷ்ணன் துணைவியாரும் இளங் குழந்தைகளும் அன்புடன் இருந்தனர். பெரிய மகன் (வயது 5) பள்ளிக்குச் சென்றபோது அவன் தந்தையாரும் சென்றார். நானும் அவர்கள் பள்ளி வரையில் உடன் சென்றேன். இங்குள்ள பள்ளி விதிகளைப்பற்றிக் கூறிக்