பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 17.4.85 கொண்டே வந்தார், குழந்தைகளைப் பெற்றோரே பள்ளிக்கு காலை 8.30க்கு அழைத்து வந்துவிட்டு, அவர்களே திரும்ப மாலை 3 மணிக்கு வந்து அழைத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப் பதோடு, பள்ளியிலிருந்து பிள்ளைகளை நீக்கியும் விடுவார் களாம். வழியில் குழந்தைகளுக்கு யாதொரு தீங்கும் நேராதிருக்கவே இந்த ஏற்பாடாம். அப்படியே திரும்பிச் செல்லும்போதும் பெற்றோர் வரவில்லையானால் வீட்டிற்கு அனுப்பமாட்டார்களாம். நேரமானால் வீ ட் டி ற் கு த் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரியவரை வரச் செய்வார்களாம். (இங்கே எல்லோருடைய வீட்டிலும் பெரும்பாலும் தொலைபேசி உண்டு). பிள்ளைகள் காலையில் கடும் குளிரையும் பொருட்படுத் தாமல் நல்ல உடையுடன் மேலே தோல், பிளாஸ்டிக், (f) பர், கம்பளி ஆகியவற்றால் ஆகிய புறச்சட்டையிட்டு, உடலை நன்கு மூடிக்கொண்டு உரிய நேரத்தில் பள்ளிக்கு ஓடி வருகின்றனர். காலந்தாழ்த்து வருதல் கடுந்தண்டனைக்கு உள்ளாதலாகும். சிலநாள் காலந்தாழ்ந்தால் பள்ளியி லிருந்து நீக்கிவிடுவர். அப்படியே தகவல் அறிவிக்காமல் பிள்ளைகள் சிலநாள் தொடர்ந்து வராவிட்டால் வீட்டுக்கு எழுதித் தகவல் அறிவர். பெற்றோர்கள் ஆசிரியர்களை இருமாதங்களுக்கு ஒரு முறை நேரில் கண்டு பிள்ளைகளின் வளர்ச்சிபற்றி அறியவேண்டுமாம். அரசாங்கமே நடத்தும் பள்ளிகளில் சம்பளமே இல்லை (நம் நகராண்மைக் கழகப் பள்ளிகளையும் அரசாங்க மானியம்பெறும் பள்ளிகளையும் போல). அவற்றுள்ளேயே இத்தகைய கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றை நம் நாட்டு இலவசப் பள்ளிகளோடு ஒத்துநோக்கி நெடிது நினைந்தேன். நான் கண்ட நாடுகளில் எங்கும் குடிசைகள் இல்லை: இங்கும் அப்படியே. மத்திய உணவு ஏற்பாடு இல்லை: இருப்பினும் அங்கங்கே தேவையா யின் இளங்குழந்தைகளுக்கு வேண்டிய பால், பிஸ்கட் முதலியன தருகிறார்களாம்.