பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பள்ளியின் தோற்றமும் எடுப்பாக இந்த நாட்டுக்கு ஏற்ப இருந்தது.வீடுகளைப் பள்ளிகளாக மாற்றிக் குழந்தைகளைச் சேர்க்கும் வழக்கம் இங்கே இல்லை. அரசாங்க இலவசப் பள்ளிகளைத் தவிர்த்து, மானியம் பெறாத தனியார் பள்ளிகள் பல உள்ளனவாம். அவற்றில் மாதம் 100 டாலர் முதல் 300 டாலர் வரை (ரூ. 1200 முதல் 3600 வரை) சம்பளம் வாங்குவதாகச் சொன்னார்கள். எனினும் கல்வி முறை இரண்டிலும் பெரும்பாலும் ஒரே அளவிலும் ஒரே வகையான தேர்விற்கு அனுப்பும் நிலையில் (பள்ளிவரை) உள்ளதுவாம். இளம் பிள்ளைகளுக்கு நிறைய வீட்டுவேலை கள் (கணக்கு பாடம் எழுதுதல் - வண்ணம் தீட்டுதல் . படம் வரைதல்) தருகிறார்கள். பெரிய வகுப் பு களுக்கும் அப்படியே. அவர்கள் அவற்றை முடிக்க, வீட்டில் பெற்றோர்கள் உதவுகிறார்கள் (அநேகமாக எல்லோரும் - தாய்தந்தையர் இருவரும் நன்கு படித்தவர்களே). ஆசிரியர் களே வெளியில் நின்று பிள்ளைகளைத் தத்தம் வகுப்பு களுக்கு, பெற்றோர்களிடமிருந்து அழைத்துச் செல்லு கின்றனர். சில ஆசிரியர்கள் சாலையில் - பள்ளிக்கருகில் நின்றுகொண்டு விரைந்து போகும் வண்டிகளை நிறுத்தி, மெல்லச் செல்லுமாறு சொல்லி, பிள்ளைகள் சாலைகளைக் கடக்க மெல்ல அழைத்துச் செல்லுகின்றனர். அவரவர் வகுப்புக் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்ப டைத்தால் முகஞ்சுளித்துப் புறங்கூறும் நம் நாட்டு ஆசிரியர் கள் நிலை என் கண்முன் நின்றுவிட்டது. பள்ளிகளுக்கெனத் தனித்த உந்துவண்டிகள் (அரசாங்கப் பள்ளிகள் உட்பட) இருக்கின்றன. நெடுந் தொலைவி லிருந்துவரும் பிள்ளைகளுக்கென அவை பயன்படுகின்றன. அவற்றையும் ஆசிரியர்களே பொறுப்புடன் மேற்பார்வை செய்கின்றனர். அரசாங்கப்பள்ளிகளில் இலவசமாகவே ஏற்றி வருகின்றனர். இவ்வாறு அரசாங்கம் தன், நாட்டுப் பிள்ளைகள் கல்வியில் முற்றும் கருத்திருத்தி மக்களை அறிவறிந்தவர்களாக் ஆக்கமுயல்வது பாராட்டத்தக்க ஒன்றாகும்.