பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 உருவாக்கப்படுபவை. இலண்டலில் அல்லது சிக்காகோவில் வாழும் இளைஞர்களுக்கு இவை சுவை தரா. குறைந்த பயனை ஒரு வேளை தரலாம். என்னென்ன வகையில் இந்த நாற்கள் அமையவேண்டும், என்னென்ன ஒளி வில்லைகள், வீடியோப் படங்கள் தேவையென அறிவிப்பின் அவற்றை நாம் உருவாக்கி அனுப்பலாம். அல்லது பொருள் வளமும் எந்திர முன்னேற்றமும் உடைய அந்த நாட்டு அன்பர்களே உருவாக்கலாம். இங்கிலாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா முதலிய நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகள் இருக்கின்றன. அவற்றில் பணியாற்றும் ஆய்வாளர்களின் உதவியை நாடலாம். இப்போது அமெரிக்காவில் உருவாகியுள்ள தமிழ்நாடு அற நிறுவனம் (பவுண்டேசன்) தனது கிளையொன்றை இலண்டனிலும், தமிழ்நாட்டிலும் தோற்றுவித்து இப் பணியை மேற் கொள்ளலாம். தன் காலில் நிற்கமுயன்று வெற்றி கண்ட தமிழ் நண்பர்கள் இவற்றைச் சிந்திக்க வேண்டும். இவ்வாறு கூறினும், தொடக்கத்தில் தமிழக நிறுவனங்கள், பிறநாட்டுத் தமிழர்க்கு உதவுவதைத் தமது கடமையாகக் கருதிச் செயற் படவேண்டும் என்பதை நாம் மறக்கலாகாது. . மதக் கண்ணோட்டத்துடனும், கல்வியாளர், தமிழ்ப் பற்றாளர் என்ற கண்ணோட்டங்களுடனும் இந்த நூல் உருவாகியுள்ளது. நாட்குறிப்பு வடிவில் உருவானதால் தூங்கச் சென்ற நேரம், காலையில் எழுதல் முதலியவை பல பக்கங்களில் காணப்படுவதை மறந்து படித்தால் நூல் பயனுள்ளதாக அமையும். வ. அய். சுப்பிரமணியம் சிறப்பு இயக்குநர், பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம் திருவனந்தை