பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 17.4.85 119 கல்விமுறையில் பாடங்கள் குறித்த நூல்களைப் பார்த்தேன். சிறப்பர்கக் கணக்கு முதலியன நம் நாட்டு நூல்களை ஒத்தே உள்ளன. ஆங்கிலம் கட்டாயம் பயில வேண்டும். (அது நாட்டு மொழி). பிற பாடங்களும் உள்ளன. மேல்வகுப்பிற்குச் செல்ல் செல்லச் பாடங்கள் (நம் நாட்டினைப் போன்ற்ே) அதிகமாகும். இளம்பிள்ளை களுக்கு வண்ணம் தீட்ட, கூட்டல் கழித்தல் போன்றவை செய்ய, நூல்கள் மட்டுமின்றி, தனித்தாள்களும் அச்சிட்டு வழங்கப்பெறுகின்றன. அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று செம்மையாகச் செய்து முடிக்க வேண்டுமாம். அவற்றைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதுகூட இல்லை. குறிப்பேடுகளும் நூல்களும் மட்டும் கொண்டு வந்தால் போதும். ஆயினும் கற்றவர்களாகிய பெற்றோர், அவற்றை நன்கு பயன்படுத்தி, குழந்தைகள் அறிவு வளர உறுதுணையாகின்றனர். இத் தாள்களும் அரசாங்கப் பள்ளிகளில் (Public Schools) இலவசமாகவே தரப்பெறு கின்றன. மேலே குளிருக்கு பலவகைச் சட்டைகள் அணிவ தால் சீருடையற்றிய பேச்சு இல்லை. என்றாலும் எல்லோரும் சிறந்த வகையில் சட்டைகள் அணிந்து கையுறை காலுறைகளிட்டு, பூட்ஸ் என்னும் காலணி அணிந்து வருகின்றனர். - - - இவ்வாறு பள்ளிகளின் தன்மைகளை அறிந்த நான் வெளியே சென்றேன். அஞ்சலகம், வங்கி முதலியவற்றிற்குச் செல்ல நேர்ந்தது. எங்கும் '0' கீயூ வரிசை. காலை 8-30 மணிக்கே அஞ்சலகம் தொழிற்பட ஆரம்பிக்கின்றது. சில வங்கிகளும் அப்படியே. எங்கும் உடனுக்குடன் பணியா ளர்கள் வந்தவர்களுக்கு உதவி அனுப்புகின்றனர். எனவே எங்கும் நெடுநேரம் காத்திருக்க வேண்டியதில்லை. கடைகள் பக்கம் சென்றேன். நம் நாட்டுக் காய்கறிகள், பழங்கள் அனைத்தும் இருந்தன. சில நம் நாட்டிலிருந்தும் சில தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும் வருகின்றனவாம். மற்றும் நல்ல அரிசி, பிற உணவுப்பொருள்கள் யாவுறு