பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 18.4.85 இன்று வேறு பணிகள் இல்லை. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேசவேண்டிய இரு சொற்பொழிவு களுக்கு உரிய குறிப்பினைத் தயார் செய்தேன். இங்கே அமெரிக்காவில் செல்லவேண்டிய பிற இடங்களில் உள்ள அன்பர்களுக்கு கடிதங்கள் எழுதின்ேன். இங்கே தேவைக் கான என் சென்னை வங்கியில் வாங்கிய காசோலையினை உரிய முறையில் மாற்றினேன். கடிதங்கள் எழுதி முடித்து அஞ்சலில் இட மணி 12 ஆகிவிட்டது. பிறகு பென்சில் வேனியாவிலிருந்து தொலைபேசியில் பேசினார்கள். பேசும் பொருள் பற்றிய முடிவு, நான் சொல்லவேண்டிய நாள், ! தங்கும் இடம் முதலியன பற்றியும் முடிவு செய்யப்பெற்றது. இனி நாணயமாற்றுத் தொல்லை இல்லை. ஹானலூலூ (கவாய்மடம்)விலிருந்த ஜப்பான் புறப்படும் வரையில் (1.6-85 வரை) இதே அமெரிக்க நாணயமே புழக்கத்தில் உள்ளமையின் எளிதாக மாற்றிக்கொள்ளலாம். - பிற்பகல் சிறிது நேரம் படக்காட்சி (T. W.) கண்டேன் பிள்ளைகள் பள்ளிப்பயிற்சி பற்றிக் காலையில் காட்டினார் கள். பள்ளிகளின்முறை - குழந்தைகள் பயிற்றும் முறை - வெறும் விளையாட்டாகவே உள்ளது. அங்கே நம் நாட்டில் "U. K. G. என்று சொல்லும் குழந்தைகளின் மேல் வகுப்பு இங்கே இல்லை. இந்த வகையினை (Pre School Educa tion) பள்ளிப்படிப்புக்கு முன்னோடி" என்ற வகையில் கூறுகின்றனர். பெரும்பாலும் பள்ளிக்கல்வி பற்றிய காலை