பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 - - ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நிகழ்ச்சிகள், பள்ளி ஆரம்பப்பள்ளி (Up to W Grade. Class) ஆகியவைப்ற்றியே காட்சிகள் அமைகின்றன. அவை பெரும்பாலும் 'கார்ட்டுன்' படங்களாகவே உள்ளன. இலண்டன், பாரிஸ் ஆகியவற்றிலும், இதே நிலைதான். விளம்பரங்கள் மிக அதிகமாகக் காட்டப்பெறுகின்றன. நம் நாட்டுக் காய்கறிகள் விற்கும் கடைக்குள் சென்று விசாரித்தேன். எல்லாக்காய்கறிகளும்-கொத்தமல்லி,இஞ்சி, கீரைவகைகள் உட்பட இங்கே மிகப் பசுமையாகக் கிடைக் கின்றன. விலைதான் அதிகம். பெரும்பாலன மெக்சிகோ, தென் அமெரிக்கப் பகுதிகளிலிருந்து விமான வழியே வருகின்றனவாம். பழங்களும் பலவகை. யாவையும் நல்ல சுவையோடு உள்ளன. எனக்குப் பிளடெல்பியா செல்வதற். கும் டிக்கெட் பதிவு செய்யப் பெற்றது (23-4-85 காலை 7 மணிக்கு) ஒரு மணிநேரம் பயணம் வீட்டில் உள்ள இளங்குழந்தை கண்ணனுடனும் பெரியவன் (5 வயது) சொக்கலிங்கத்துடன் தொலைக்காட்சி கண்டு கொண்டே - அவர்கள் பயிலும் நூல்களைப் பார்த்துக் கொண்டே - பள்ளி பற்றிச் சில கேட்டுக்கொண்டே மாலை யிலும் இரவிலும் பொழுது போக்கினேன். நாளை நியூயார்க் நகரைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தேன். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்கள் பயின்ற கர்னல் பல்கலைக்கழத்தை குறித்தபடி பார்க்க போக்குவரத்து வசதி சரியில்லை. எனவே அம் முயற்சியினை விட்டு விட்டேன். உணவுக்குப் பிறகு 9 மணிக்கே உறங்கினேன்.