பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 19-4-85 நியூயார்க், நகரில் பொழுது 5 மணிக்கே விடிகிறது. என்றாலும் பணியும் குளிரும் இன்னும், நீங்கவில்லை. அனைவரும் கம்பளி போன்ற உடைகளுடன் மேல். பெரும் போர்வை போன்ற புற ஆடையினையும் போர்த்திக்கொண்டு தான் வெளியே செல்கின்றனர். எனவே இன்று நானும் வெளியே செல்வதால் கம்பளிக்கோட்டு, கம்பளி மேலாடை இவற்றுடன் புறப்பட ஆயத்தமானேன். எனினும் இன்று குளிர் இல்லை; எனக்கு பகலில் கம்பளி உடை மிகுந்த வெப்பத்தைத் தந்தது. மாலையில் மழை. நான் எங்கே சென்றாலும் மழை என்னை விடாது பின்பற்றுகிறது. இறைவன் கருணைமழை என்னை நோக்கி வற்றாது பெய்து கொண்டே இருப்பதாக போற்றினேன். முதன் முதல் ஜினிவாவில் இறங்கும்போது சிறுதுாறல்; பாரிசில்;இரு நாள் வெளியே செல்ல முடியாத மழை. உரோமில் தூறல் (எனினும் நிகழ்ச்சிகளுக்கும் சுற்றுலாவுக்கும் இடையூறு இல்லை). மறுபடியும் இலண்டனில் மழையுடனே நுழ்ைந் தேன். இருநாள் மழை. இங்கே வந்தபோது மழை இல்லை யாயினும், மாலை 2 மணி அளவில் எங்கிருந்தோ.பெருமேகம் சூழ்ந்து இடைவிடாது பெய்தது. நான் 6 மணிக்கு வீட்டுக்குத் திரும்பும்வரை மழைதான். நான் சுற்றிவந்த பல பகுதி களும் (சுமார் 10 கல்) மழைபெய்துகொண்டே இருந்தது. அன்பர் இராதாகிருஷ்ணன் அவர்கள் எனக்காகக் காலையில் புறப்பட்டு என்னைச் சுற்றுலா தொடங்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். பாதாள இரெயிலில்