பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் சென்றோம். இங்கே டிக்கெட் இல்லை. பித்தளையாலான 'டோக்கன். முன்னரேவேண்டுமானாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். விலை 90 சென்ட் (நம் நாட்டு 11.50ருபாய் சமமாகும்) ஒரு நிலையம் சென்றாலும் எங்கே சுற்றினாலும் இதுபோதும். இதை வாங்கி வழியிடையுள்ள ஒரு சிறுமுழை யில் இட்டால் வழிவிடும். எனவே யாரும் இந்த டிக்கெட் இல்லாது போக முடியாது. மிகக் குறைந்தது 11-50ருபாய் அள்வு என்றால் நம் நாட்டில் உள்ள பயணச் சீட்டு முறை எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பது தோன்றும். குறைந்தது 50 பைசாதானே. பஸ்சில் 10 பைசா ஏற்றினால் கூடக் கூக்குரலிடும் நம்மவர் இத்தகைய நாடுகளைக் காண வேண்டும். நான் சுற்றிய எந்த நாட்டிலும் இந்நிலைதான். ஒரு தொலைபேசிக்கு 25 செண்டு (3ருபாய்க்கு மேல்). மேலும் இங்கே மாதாமாதம் வாங்கும் பருவமுறைச் சீட்டும் (season ticket) கிடையாது. நாள்தொறும் அலுவலகம் செல்லும் அத்தனை பேரும் அன்றாடம் வாங்கத்தான் வேண்டும். பாவம் அவர்களுக்குச் சலுகை இல்லையாயி னும் கவலை இல்லை. அன்றாடம் இரு பக்கமும் '0'வில் நின்று சீட்டு எடுக்க ஆகும் நேரத்தை எண்ணி வருந்த வேண்டியுள்ளது. (நல்ல வேளை, ஒரே சமயத்தில் எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்) கார் வைத்திருப்பவர் நிலை இன்னும் வருந்தத்தக்கது. இங்கே பலர் கார் வைத்திருந்தாலும் இன்னும் பலர் கார் வாங்காமலேயே இருக்கின்றனர். அலுவலகங்களுக்குக்குக் காரில் சென்று, வாசலில் நிறுத்த ஒரு நாளைக்கு (8.10 மணி நேரம்) 10 டாலர் (சுமார் 120 ரூபாய்) தரவேண்டும். அப்படியே வேறு கடைகள் பக்கம் நிறுத்தினாலும் ஒரு மணிக்கு 2 டாலர் முதல் 50 செண்டு வரை உள்ளது. (ஒரு டாலர் ரூ 12.50 மதிப்பு) எனவே சொந்தமாக ஒட்டினாலும் இதற்கெல்லாம் அஞ்ச வேண்டியுள்ளது. நல்ல வேளை பாதாள இரெயில் இந்தக் கார் நிறுத்தும் இடம் ஆகியவை அனைத்தும் பொதுநலத்துறையினைச் சேர்ந்ததாகையால் அத் துறைவளர நல்ல வருமானம் உண்டாகிறது போலும்.