பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 19.4.85 125 எனினும் சிலர் பாதாள இரெயில் யாவும் தனியார் உடைமையே என்கின்றனர். தெருக்களில் இரவு நேரங்களில் 'நிறுத்துவதற்கும் கட்டணம் உண்டு. சில தெருக்கள் விதி விலக்கு. பாரிஸில் எல்லாத் தெருக்களுக்கும் (தம் வீட்டுமுன் நிறுத்தினாலும்)கட்டணம் உண்டு. இவற்றையெல்லாம் எண்ணும்போது நம் நாடு எவ்வளவு மேல் என்பது புலனா கும. காலை அன்பர் இராதாகிருஷ்ணன் சுற்றுலா புறப்படும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்று அங்கே விட்டு, உடன் அலுவலகம் சென்றார். இங்கே கடமை உணர்ச்சி அதிகம். யாரும் அலுவலகம் காலம் தாழ்த்துச் செல்ல மாட்டார்கள். வாரத்தில் ஐந்து நாள்: சனி ஞாயிறு விடுமுறை. தேவையற்ற வகையிலோ டிசம்பரோடு விடுமுறை தீர்ந்துவிடுமென்றோ யாரும் விடுமுறை எடுப்பதில்லை. எனவே அவர்கள் உரிய வேளையில் 9 அல்லது. 9.30க்கு அலுவலகம் சென்று சேர்கின்றனர். நான் ஏறிய உந்து வண்டி சில இடங்கள் சுற்றி, 9.15'க்கு உலகிலேயே உயர்ந்த கட்டடத்தின் முன் வந்தது. (1436 அடி உயரம் என்கின்றனர்) அந்த இடத்தைச் சுற்றிக்காண்ப ¿Š®jib (Empire State Building) Gundi) g75) ou@you3 fôgô என ஒரு மணி நேரம் ஒதுக்கியுள்ளனர். நியூயார்க் பழைய நகரம், 'யார்க் என்று அதற்குமுன் இருந்த ஒரு சிற்றுரரை நோக்க, நியூயார்க் பெரிய நகரமாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க நாட்டு வளர்ச்சியில் இது பழையதும் தலைநகர மாகவும் இருந்திருக்கக்கூடும் (நாம் நாட்டில் சில காலம் கல்கத்தா தலைநகரமாக இல்லையா). இப்போதும் வாஷிங்டன் (D.C.) தலைநகர் என்ற பெயரைப் பெற்றா லும், பெரும்பாலும் எல்லா அலுவலகங்களும் இங்கேதான் உள்ளன என்கின்றனர். எனவே இது ஒரு காலத்தில் (Empire) 'arbuusi' arsonath ‘Empire State’ argurajib அழைக்கப் பெற்றதாம். ஆகவே அதற்குச் சொந்தமான இந்தகட்டிடத்திற்கு அவ்வாறு பெயரிட்டனர். இது கட்டிய